இந்திய திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் புது புது வர்த்தகத்தில் இறங்கி வருகிறார். 2024ல் மதுபான தயாரிப்பிலும், விற்பனையில் இறங்கிய அனிருத் தற்போது இந்தியாவில் ப்ரீமியம் மதுபான மார்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
ராக்ஸ்டார் அனிருத் பாட்டு பாடி பார்த்திருப்போம், இப்போ மதுபான வியாபாரியாக பார்க்கப்போகிறோம். முதலில் வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்து வந்த அனிருத் தற்போது இந்தியாவில் விற்பனையை துவங்கியுள்ளார். அடுத்தாக தமிழ்நாட்டில் விற்பனை துவங்க உள்ளதாகவும் அனிருத் சமீபத்திய இண்டர்வியூவில் தெரிவித்தார்.

அனிருத் தனியாக இந்த மதுபான வர்த்தகத்தை செய்யவில்லை, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் தொழிலதிபர் ஸ்ரீ ஹர்ஷா ஆகியோர் இணைந்து தொடங்கிய பிரீமியம் டக்கிலா பிராண்ட் தான் லோகா லோகா, நேற்று பெங்களூரில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் ஏற்கனவே வெற்றிகரமாக விற்பனையாகி வரும் இந்த பிராண்ட், பெங்களூரு சந்தையில் தனது பிளான்கோ மற்றும் ரெபோசாடோ வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

லோகா லோகா கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானதிலிருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் பல விருதுகளை வென்றுள்ள இந்த பிராண்ட் டக்கிலா மதுபானம், தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
அனிருத் சமீபத்திய யூடியூப் இண்டர்வியூவில் Loca Loka பிராண்ட் மதுபானம் அடுத்தாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் Loca Loka வாயிலாக அனிருத் இசையமைப்பாளர் என்ற நிலையில் இருந்து பிஸ்னஸ்மேனாக உயர்ந்துள்ளார். இன்த இண்டர்வியூவில் தான் உருவாக்கிய பிரைவேட் மியூசிக் லேபிள் குறித்தும் பேசியுள்ளார்.

பெங்களூரில் லோகா லோகா மதுபானம் தற்போது பிரீமியம் ஹோட்டல்கள், பார், உணவகங்கள் மற்றும் ரீடைல் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. லோகா லோகா தரம் மற்றும் அனுபவத்தை மையமாகக் கொண்ட பிரீமியம் டெக்யூலா என இந்நிறுவனம் கூறுகிறது.
இது இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வரும் பிராண்டாக உருவெடுத்துள்ளது. பெங்களூரு போன்ற முக்கிய வர்த்தக நகரத்தில் அறிமுகமாகியுள்ளது பிராண்டின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும். இந்தியாவில் டெக்யூலா சந்தை விரிவடைந்து வரும் நிலையில், லோகா லோகா தனது இடத்தை உறுதிப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications