மனிஷ் மல்ஹோத்ரா, ரிது குமார் மற்றும் சப்யாசாச்சி போன்ற உலகளவில் பிரபலமான இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் இருக்கும் வேளையில், இந்தியாவின் பணக்கார மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே தான் பல கோடி பெண்களுக்கு புதிய இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.
யார் இந்த அனிதா டோங்ரே..? ஆண்களுக்கு இணையாக, பல இடத்தில் ஆண்களை விடவும் பெண்கள் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் வேளையில் போட்டி மிகுந்த ஆடை வடிவமைப்பு துறையில் அனிதா டோங்ரே எட்டிய உயரம் மிகவும் வியப்புக்குரியது.

அனிதா டோங்ரே இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் மற்றும் நாடு முழுவதும் 270 க்கும் மேற்பட்ட கடைகளுடன் பல நூறு கோடி மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கியுள்ளார். இந்த உச்சத்தை அவ்வளவு எளிதாக அனிதா டோங்ரே எட்டவில்லை என்பதை யாரும் மறந்துவிட கூடாது.
அனிதா டோங்ரே-வின் பல கோடி ரூபாய் மதிப்பிலாண வணிகத்தின் ஆரம்பம் என்றால் இரண்டு தையல் இயந்திரங்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.
அனிதா டோங்ரேயின் தாய் புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆடைகளை சொந்தமாக அவரே தைத்து வந்தார், அதுவே அனிதா டோங்ரே ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. பின்னாளில் அனிதா டோங்ரே, பணிபுரியும் பெண்களுக்கு மலிவு விலையில் ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்திய சில்லறை வர்த்தக பிராண்ட் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார்.
இதையே அடிப்படை ஐடியாவாக எடுத்துக்கொண்டு அனிதா இரண்டு தையல் இயந்திரங்கள் மற்றும் அவரது தந்தையிடமிருந்து பெற்ற ஒரு சிறிய கடன் மூலம் தனது சொந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்தார். 1995 ஆம் ஆண்டில், அனிதாவும் அவரது சகோதரியும் ஒரு சிறிய வீட்டில் இருந்து மேற்கத்திய ஆடைகளைத் சொந்தமாக டிசைன் செய்து தைக்கத் தொடங்கினர்.
அனைத்து மால்கள் மற்றும் பெரிய பிராண்டுகள் அவரது ஆடைகளை நிராகரித்தன, ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தார். மால்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளால் நிராகரிக்கப்பட்ட பிறகு, அனிதா டோங்ரே தனது சொந்த பிராண்டைத் தொடங்க முடிவு செய்தார்.
அனிதா டோங்ரே உருவாக்கிய பிராண்டின் பெயர் AND, இது இப்போது இந்தியாவில் பிரபலமான பிராண்டாக உள்ளது. 2015 இல் AND பிராண்ட் பெயர் அறிமுகப்படுத்திய பிறகு, அவர் தனது நிறுவனத்தின் பெயரை ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே என மாற்றினார்.
இன்று இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆடைகள் பிராண்டுகளில் ஒன்றாக உயர்ந்துள்ள நிலையில் அனிதா டோங்ரே இப்போது தனது ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே கீழ் AND, குளோபல் தேசி, அனிதா டோங்ரே பிரைடல் கோச்சர், அனிதா டோங்ரே கிராஸ்ரூட் மற்றும் அனிதா டோங்ரே பிங்க் சிட்டி போன்ற தனித்தனி பிராண்டுகள் உள்ளது.
2019-20 நிதியாண்டில், இந்தியாவில் 270க்கும் மேற்பட்ட கடைகளைத் தொடங்கிய பிறகு, தனது சில்லறை வர்த்தகம் கிட்டத்தட்ட ரூ.800 கோடியாக உயர்ந்தது என அனிதா டோங்ரே ஒரு பேட்டியில் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில், அவரது வருமானம் ரூ. 1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஃபோர்ப்ஸ் இந்தியாவில் உள்ள பணக்கார பெண் ஆடை வடிவமைப்பாளர் பட்டியலில் அனிதா டோங்ரே-வை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அனிதா டோங்ரேயின் நிகர மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது 83.21 கோடி ரூபாயாகும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications