ஆண்டாண்டு காலமாக தங்கள் குடும்பம் செய்து வந்த தொழிலில் ஈடுபடாமல் பட்டப்படிப்பை முடித்ததும் தனக்கென்று ஒரு தொழில் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார் அஞ்சனா ரெட்டி. தரைமட்டத்தில் இருந்து அந்தத் தொழிலில் முழுக்க முழுக்க தனது விருப்பங்களையும் உழைப்பையும் அதில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தார் அஞ்சனா ரெட்டி.
பல ஆண்டுகள் கழித்து சொந்தக்காலில் நின்று ஜெயித்த இந்தியப் பெண்கள் வரிசையில் அஞ்சனா ரெட்டியும் ஒருவராக உருவெடுத்திருந்தார். ஹுரன் சொந்தக்காலில் நின்று சாதித்த பெண்கள் பட்டியலில் 31ஆவது இடத்தில் இருந்தார். அஞ்சனா தொடங்கிய பேஷன் நிறுவனமான யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ் மூலம் ஏராளமாக சம்பாதித்தார்.

இந்தியாவின் இரண்டு விளையாட்டு பிரபலங்களான விராட் கோலி, சச்சின் ஆகியோருடன் இணைந்து அவர்களது ஆதரவு பெற்ற பிராண்டுகளின் பெண் அதிபர்கள் பட்டியலில் அஞ்சனா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றவர்.
கலக்டிபிலியா (Collectabilia) என்ற பிராண்டுக்கு அஞ்சனாவுடன் சச்சின் இணைந்து முதலீடு செய்துள்ளார். அதேபோல் மிகவும் பிரபலமான இமாரா, ராகன் ஆகிய பிராண்டுகளில் கோலியுடன் இணைந்து அஞ்சனா முதலீடு செய்துள்ளார்.
மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அஞ்சனா பர்டியூ பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை முடித்தார். 2011 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஸ்போர்ட்ஸ் மெமொரோபிலியா பிராண்டுகளில் முதலீடு செய்யும் யோசனையை தந்தார். அவரது யோசனை விரைவிலேயே பிரபல முதலீட்டாளர் ஆனார். அடுத்த ஆண்டே USPLஐ அவர் தொடங்கினார்.
விளையாட்டு நினைவுச்சின்னங்கள் தொழிலில் சந்தையில் அதிக சிக்கல்களை அஞ்சனா சந்தித்தார். பேஷன் வேர் ஆடைகளை அவர் விரிவு படுத்தினார். கிரித்தி சனான், ஆதித்யா ராய் கபூர் ஆகிய பிரபலங்களின் முதலீட்டை பெற்றார்.

அஞ்சனாவின் சிங்கிள் என்ற பிராண்டை அவர்கள் பிரபலப்படுத்தினர். இது அவரது வெற்றிக்கு அடித்தளம் வகுத்தது. தினமும் 18 மணிநேரம் சளைக்காமல் அஞ்சனா வேலை பார்த்தார். கோடக் தனியார் பேங்கிங் ஹுருன் வெளியிட்ட முன்னணி பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார். இப்போது அஞ்சனா ரெட்டியின் நிகர சொத்து மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
துணிந்து செயல்பட்டால் பெண் என்றும் பாராமல் தொழில் வெற்றிகள் தம் காலில் வந்து குவியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் இந்த சாதனைப் பெண் அஞ்சனா ரெட்டி.


Click it and Unblock the Notifications