தந்தையிடம் முதல்முறையாக கடன்.. 5 ஆண்டுகளில் ரூ.33 லட்சமாக உயர்ந்த சம்பளம்.. அசத்திய அங்கூர்..!!

தொழில்முனைவோரும் எழுத்தாளருமான அங்கூர் வாரிகூ சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், பலருக்கும் ஊக்கம் தரும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், அமெரிக்காவில் PhD படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு திரும்பியதில் இருந்து, 5 ஆண்டுகளில் அவரது வருட வருமானம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.33 லட்சமாக உயர்ந்தது வரை தனது பயணத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், "நான் 24 வயதில், திட்டமின்றி இந்தியாவுக்கு திரும்பினேன். எதிர்காலம் குறித்து என்ன செய்வது என்ற தெளிவே இல்லை. ஆனால் பணம் தேவைப்பட்டது. எனவே வேலையைத் தேட ஆரம்பித்தேன்." MBA படிப்பு இல்லை. நல்ல உறவுகள் அல்லது நெட்வொர்க் இல்லை. அனுபவமும் குறைவு. அதனால் செய்தித்தாள் விளம்பரங்களை பார்த்து வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். நேரடி நேர்காணல்களில் கலந்து கொண்டு 45 நாட்கள் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, ஒரு வாய்ப்பு கிடைத்தது. NIS Sparta என்ற நிறுவனத்தில் இறுதிச் சுற்றுக்குள் சென்றதாக கூறியுள்ளார்.

தந்தையிடம் முதல்முறையாக கடன்.. 5 ஆண்டுகளில் ரூ.33 லட்சமாக உயர்ந்த சம்பளம்.. அசத்திய அங்கூர்..!!

அப்போது, "எனக்கு என்ன கேட்பது என்றும் தெரியாது. அவர்கள் எனக்குக் கையில் ரூ.15,000 கொடுத்தார்கள். அது எனக்காக பெரிய விஷயம்!" என்று கூறியுள்ளார். அவரது முதல் மாத சம்பளம் ரூ.14,746. ஆனால் அங்கே வேலை செய்யும் பிறர் எல்லாரும் மேலாண்மை பட்டதாரிகள். அவர்களோடு ஒப்பிடும்போது, தன்னம்பிக்கை குறைவாக இருப்பதை அவர் உணர்ந்தார். அதுவே MBA படிப்பை தொடர வேண்டிய தேவையை உணர்த்தியது.

தந்தையிடம் முதல் முறையாக கடன்: அவர் ISB-யில் ஒரு வருட MBA படிப்பைத் தேர்ந்தெடுத்தார். செலவு அதிகம். இதனால், குடும்பத்தில் முதல் முறையாக கடன் வாங்கினார். "MBA முடிந்த பிறகு மாதம் ரூ.35,000 சம்பளம் கிடைக்கும் என்று நம்பினேன். இதற்காக ஒரு 'பந்தயம்' போட்டேன்." என்று கூறியுள்ளார். MBA முடிந்ததும், வேலை கிடைக்கவில்லை. BCG நேர்காணலில் தோல்வி. AT Kearney இரண்டாவது சுற்றில் தடுமாற்றம். ஆனால், யாரோ ஒருவர் அவரின் திறமையை நம்பி, ஒரு வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். அந்த நம்பிக்கையையும் நிவர்த்தி செய்தார். AT Kearney-யில் ஆண்டு சம்பளமாக ரூ.12 லட்சம் பெற்றார். வெறும் 18 மாதங்களில் வேகமாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியேறுவதற்குள் அவரது ஆண்டு சம்பளம் ரூ.33 லட்சமாக இருந்தது.தெளிவான வளர்ச்சி : 24 வயதில் - மாத சம்பளம் ரூ.14,746 ஆகவும், 26 வயதில் - ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம் ஆகவும், 29 வயதில் - ஆண்டு சம்பளம் ரூ.33 லட்சம் ஆகவும் உயர்ந்தது.

அவர் ஒரு நிறுவனம் தொடங்கும் வேளையில், நிலையான வேலை, அதிக சம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை எல்லாம் இருந்தது. ஆனாலும், அவர் அதையெல்லாம் விட்டு, என்னால் வளர முடியும் என்று நினைத்த வழியை தேர்ந்தெடுத்தார். அவர் தன்னை நம்பி, தைரியமான முடிவு எடுத்தார். அந்த முடிவு தான், அவருடைய வாழ்க்கையை தற்போது முழுமையாக மாற்றியுள்ளது.

இளம் தலைமுறைக்கு இது ஒரு முக்கியமான பாடம் : தன்னம்பிக்கை, இடைவிடாத முயற்சி, மற்றும் வாய்ப்பு வந்தபோது அதை முழுமையாகப் பயன்படுத்தும் மனநிலை இருந்தால் வளர்ச்சி நிச்சயம். அங்கூர் வாரிகூவின் பயணம் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+