இந்தியாவில் பல மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளை ஐஐடி பட்டதாரிகள் நடத்தி வருகின்றனர். பெருமைக்குரிய இந்த நிறுவனங்களில் படித்து முடித்தபின்னர் வேலைக்குச் செல்லாமல் சுயமாக தொழில் நிறுவனங்களை பலர் தொடங்குகின்றனர். அப்படி சொந்த தொழில் துவங்கியவர்களில் பலர் பல முறை தங்களது தொழிலில் தோல்வி அடைந்துள்ளனர். சிலர் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.
அப்படியொரு வெற்றியாளர் தான் அன்குஷ் சச்தேவா. ஷேர் சாட்டின் இணை நிறுவனர். அன்குஷ் சச்தேவா 17 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கினார், ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தது. அவரது 18ஆவது முயற்சியில் தனது ஐஐடி நண்பர்களான பரீத் அக்சன், பானு சிங்குடன் சேர்ந்து ஷேர் சாட் ஆப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அவர்களது நிறுவனத்துக்கு பேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

2015 ஆம் ஆண்டில் அவர்கள் ஷேர் சாட்டின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கினர். பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் ஷேர் சாட்டை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தியில் தொடங்கினர். இப்போது ஷேர் சாட்டின் சிஇஓவாக சச்தேவா உள்ளார்.
ஐஐடி கான்பூரில் பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற அன்குஷ் சச்தேவா, சீனியர் செகண்டரி ஸ்கூல் படிப்பை சோமர்வில் ஸ்கூலில் முடித்தார். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் 2014 மே முதல் ஜூலை வரை இன்டர்ஷிப் செய்தார்.
ஷேர் சாட் நிறுவனம் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா என கிளை விரித்துள்ளது. கடைசியாக அந்த நிறுவனம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குகள் மூலம் நிதி திரட்டியது. இந்திய மதிப்பில் இது ரூ.40,000 கோடிக்கும் மேல் ஆகும்.
ஷேர் சாட் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்துள்ளது, அந்த நிறுவனத்தில் இப்போது 1000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஷேர்சாட் இந்தியா என்பது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், நகைச்சுவைகளைப் பகிரவும், இந்தியாவில் இருந்து தினசரி செய்திகளை நொடிகளில் பெறவும் சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது.
ஷேர்சாட், மிகவும் வசதியான செய்தி பதிவிடல் பயன்பாடு ஆகும்.
புதிய நண்பர்களை உருவாக்கவும், வீடியோக்கள், நகைச்சுவைகள், GIFகள், ஆடியோ பாடல்கள், ஷயாரிகள், மோட்டிவேஷன் கோட்கள், ஜாலி கோட்கள், பஜனைகள், பக்திப் பாடல்கள் மற்றும் வேடிக்கையான படங்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, தமிழ், கன்னடம், ஒடியா, போஜ்புரி, அஸ்ஸாமி, ராஜஸ்தானி மற்றும் ஹரியானாவி போன்ற இந்திய மொழிகள் அனைத்தும் ஷேர்சாட்டின் பல மொழி கீபோர்டில் கிடைக்கின்றன, இது அதன் யூசர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைக்க அனுமதிக்கிறது.
இந்தியா போன்ற பலதரப்பட்ட கலாசாரத்தைக் கொண்ட நாட்டில் ஷேர் சாட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நகைச்சுவைகள், வீடியோ ஸ்டேட்டஸ, மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் ஆகியவற்றின் பரந்த தொகுப்பு உள்ளது.
இதை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள், பாலிவுட் திரைப்படங்கள், தெலுங்கு திரைப்படங்கள், மராத்தி திரைப்படங்கள் மற்றும் பெங்காலி திரைப்படங்களின் வீடியோக்களின் மிகப்பெரிய ஆல்பம் உள்ளது. இது இந்தியத் திரைப்படங்கள் தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தெரிந்துகொள்ள யூசரை அனுமதிக்கிறது.
இதை தவிர அழகு குறிப்புகள், வீட்டு ஒப்பனை தந்திரங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களைப் பெறலாம். புதிய செய்திகள், பள்ளி மாணவர்களுக்கான சமீபத்திய GK, IAS, SSC, வங்கி PO தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் அனைத்து சமீபத்திய போக்குகளையும் பெறலாம்.
இப்படி இந்திய மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் கன்டென்ட் இதில் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications