மும்பை: இந்தியாவின் தொழில் குழுமம் என்ற உடன் நம் நினைவுக்கு வருபவர்களில் அம்பானியின் குடும்பமும் ஒன்று. ரிலையன்ஸ் எனும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அனில் அம்பானி, மற்றொருவர் முகேஷ் அம்பானி.
தற்போது முகேஷ் அம்பானி தொழில் மற்றும் சொத்து மதிப்பில் கொடி கட்டி பறந்தாலும், ஒரு காலத்தில் இது அனில் அம்பானியின் இடமாக இருந்தது.
அனில் அம்பானி உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர். அவரது சொத்து மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தையே அவர் நிறுவியிருந்தார்.

ஆனால் பின்னாளில் அது பெரும் வீழ்ச்சி கண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி திவாலாகி விட்டதாக அறிவித்தார். ஆனால் அவரது மகன் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் டீனா அம்பானிக்கு ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ஜெய் அன்ஷுல் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெய் அன்மோல் அம்பானி. 1991ஆம் ஆண்டு டிசம்பர் 12இல் மும்பையில் பிறந்த ஜெய் அன்மோல் அம்பானி, மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான்ஸ் கான்வென்ட் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.பின்னர் மேற்படிப்புக்காக, பிரிட்டனில் உள்ள செவன் ஒக்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.
அன்மோல் அம்பானிக்கு சிறு வயதில் இருந்தே தொழில் மீது ஆர்வம். எனவே, படிக்கும் போதே, 18 வயதிலேயே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் இன்டர்ன்ஷிப் செய்தார். பிரிட்டனில் பட்டப்படிப்பு முடிந்ததும், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் பணியாற்றத் தொடங்கினார்.
பின்னர் 2017ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். நவீன மேலாண்மை திறன்கள் மற்றும் புதுமையான கண்ணோட்டம் ஆகியவை இவரது வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. தற்போது ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸின் இயக்குநராகவும் இருக்கிறார்.
தந்தை அனில் அம்பானி திவாலான பிறகு, மகன் ஜெய் அன்மோல் குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி ஆகும். இவர் லம்போர்கினி , ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள் மற்றும், சொந்தமாக ஹெலிகாப்டர்கள், விமானங்களை வைத்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications