குழந்தைக்கு மொட்டை போடுவது, ஏதேனும் வேண்டுதல் வைத்துக்கொண்டு மொட்டை போடுவது என இந்தியாவில் மொட்டை போடும் பழக்கம் நம் கலாச்சாரத்துடன் இணைந்தது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் என பார்க்கும்போது முருகனின் அறுபடை வீடுகள், திருப்பதி பெருமாள் கோயில் ஆகியவற்றுக்கு மொட்டை அடிக்கவே பலரும் செல்வார்கள். இப்படி கோயில்களில் நாம் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி லாபம் பார்க்கின்றன.
உலகளவில் விக், ஹேர் எக்ஸ்டென்சன் (hair extension)உள்ளிட்டவற்றுக்கு டிமாண்ட் அதிகரித்து விட்டது. இவ்வாறு விக் மற்றும் எக்ஸ்டென்சன்கள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் மனித தலைமுடியில் 85% இந்தியாவில் இருந்து தான் செல்கிறது. இந்தியாவில் கோயில்களில் நாம் காணிக்கையாக வழங்கப்படும் முடி திருடப்பட்டு முறைகேடாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மியான்மர் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் வழியாக இவை சீனாவை சென்று அடைகின்றன. பின்னர் சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இந்த முடியை பயன்படுத்தி விக் தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. அவை தங்கள பிராண்டுகளின் பெயரில் அவற்றை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.

இந்தியாவில் இருந்து மனித தலை முடி கடத்தப்படுவது அண்மையில் தான் வெளிச்சத்திற்கு வந்தது. திருப்பதியில் இருந்து நாம் காணிக்கையாக வழங்கப்படும் முடி மிகப்பெரிய கண்டெய்னர்கள் மூலம் பீகார் மற்றும் நேபாளம் வழியாக மியான்மருக்கு கடத்தப்படுவதை வருவாய் புலனாய்வுத் துறையினர் கண்டறிந்தனர். இதில் தொடர்புடைய நபர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர். இவர் மீது 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இந்தியாவில் முடி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்கான மையமாக ஹைதராபாத் இருப்பது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பதியில் இருந்து செகந்திராபாத் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கொல்கத்தா அங்கிருந்து கௌஹாத்தி ,பின்னர் எல்லை வழியாக அண்டை நாடுகளுக்கும் இவை கொண்டு செல்லப்படுவதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான மனிதர்களின் தலைமுடியானது இந்தியாவில் இருந்து கடத்தப்படுகிறது.
மத்திய அரசு மனிதர்களின் தலைமுடியை ஒரு கிலோவிற்கு 65 டாலர்கள் வரை விற்பனை செய்யலாம் என அனுமதி தந்திருக்கிறது. ஆனால் கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்கள் ஒரு கிலோவை 100 டாலர்களுக்கு வாங்குகிறார்கள் . எனவே இதற்கென ஒரு நெட்வொர்க்கே இயங்குகிறதாம். இந்திய கோயில்களில் இருந்து இவற்றை சேகரிக்கும் நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் பெயரிஉல் வட மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
பின்னர் இவை சீனா கொண்டு செல்லப்பட்டு விக்குகளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மத்திய அரசு இந்த துறையை கவனித்து இந்தியாவிலேய் விக் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஆலைகளை அமைக்க ஊக்குவித்தால் 5 பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு சந்தையை உருவாக்க முடியும் என கூறுகிறார்.
பெரும்பாலும் கோயில்களில் காணிக்கையாக வழங்கப்படக் கூடிய முடியை தான் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் விரும்புகின்றனவாம். அங்கே ஒரு கிலோ 800 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம். எனவே அரசு தலைமுடி ஏற்றுமதிக்கான விலை வரம்பை உயர்த்த வேண்டும், இந்தியாவிலேயே இந்த தொழிலை உருவாக்க முன்னுரிமை தந்தால் பல ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட துறை உருவாகும், இது வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications