தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா.. போட்டி போட்டுக் கொண்டு டெஸ்லாவை அழைக்கும் அமைச்சர்கள்.. !

இந்தியாவில் உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்களுக்கு வரி விகிதம் அதிகமாக இருந்து வருகின்றது.

இது குறித்து டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் பல்வேறு தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டது. எனினும் உள்நாட்டில் உற்பத்தியினை செய்து வரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை எனலாம்.

சில தினங்களுக்கு முன்பே தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர் பயனர் ஒருவர் இந்தியாவில் எப்போது இந்தியாவில் டெஸ்லா அறிமுகம் என்று கேட்டதற்கு, நாங்கள் இந்தியாவில் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.

டெஸ்லா அழுத்தம்

டெஸ்லா அழுத்தம்

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு தகவல்கள், சமூக வலைதளம் மூலம், எலான் மஸ்க் அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் என்றும் கூறப்பட்டது. மேலும் டெஸ்லா அப்படி வரி இல்லாமல் வணிகம் செய்ய வேண்டுமெனில் பி எல் ஐ திட்டத்தில் முதலீடு செய்யலாம். இங்கு உற்பத்தியினை தொடங்கலாம் என்று கூறப்பட்டது. இத்தகைய கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்து வரப்படுகின்றது.

பஞ்சாப்-பின் அதிரடி திட்டம்

பஞ்சாப்-பின் அதிரடி திட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இங்கு வரவிருக்கும் பிப்ரவரி 14 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு பிரிவுகளும் பலத்த போட்டியிட்டு வரும் நிலையில், பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன.

தெலுங்கானாவும் அழைப்பு

தெலுங்கானாவும் அழைப்பு

டெஸ்லாவின் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் அமைக்கும்படி, சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ் அழைப்பு விடுத்திருந்தார். இவர்களை தவிர மேற்கு வங்க அரசும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்டிரா அழைப்பு

மஹாராஷ்டிரா அழைப்பு

மஹாராஷ்டிராவின் அமைச்சர் ஜெயந்த் பாட்டீல். மஹாராஷ்டிராவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பதற்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆக எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தினை இங்கு தொடக்க முயற்சிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

தமிழகத்திலும் அழைப்பு

தமிழகத்திலும் அழைப்பு

இப்படி பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செவி சாய்க்குமா?

செவி சாய்க்குமா?

வரி அதிகமாக இருக்கிறது என்று கூறி வரும் எலான் மஸ்க், இந்திய அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்பாரா? இந்தியாவில் உற்பத்தியினை தொடங்குவாரா? அப்படி தொடங்கினால் எங்கு தொடங்கலாம், என பல கேள்விகள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரிய சந்தையாக இருந்து வரும் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியினை இந்தியாவில் தொடங்கி வருகின்றன. பல இந்திய நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மின்சார வாகன உற்பத்தியினை தொடங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு போட்டியாக டெஸ்லா இந்தியாவுக்கு வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+