நடப்பு ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது . இதன் காரணமாக நம்முடைய வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறைந்தன. இந்த சூழலில் வரக்கூடிய டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாட்டில் நுகர்வோர் விலை குறியீடு பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டும் பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டும் தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்கள் குறித்த முடிவினை எடுக்கும். ஏற்கனவே பிப்ரவரியில் 6.50% சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 6.25% என குறைத்தது.

இதனை அடுத்து ஏப்ரல் மாதம் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 6.00% என ஆனது. மீண்டும் ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து ரெப்போ வட்டி விகிதம் 5.50% என மாறியது. இதனால் வீடு, வாகன கடன், நகை கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி 1 % வரை குறைந்து மக்களுக்கு பெரிய சேமிப்பை தந்தது.
இந்த சூழலில் ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் நடந்த இரண்டு நிதி கொள்கை கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை . எனவே டிசம்பர் மாதம் நடக்கக்கூடிய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு கூட்டத்தில் மேலும் ஒரு வட்டி குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது .
மேலும் ஒரு வட்டி குறைப்புக்கான வாய்ப்பு பிரகாசமாக உருவாகி இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் முன்வைப்பது நாட்டின் சில்லறை பணவீக்கம். மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்தது . மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்து பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்தன. இதனால் உணவுப்பொருட்களின் விலையும் சரிவடைந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 0. 25% ஆக குறைந்திருக்கிறது .
தொடர்ந்து நான்கு மாதங்களாக ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் பணவீக்கம் இருந்து வருகிறது . இதனை அடிப்படையாகக் கொண்டு ரிசர்வ் வங்கி மேலும் ஒரு ரெப்போ வட்டி விகித குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்பார்த்ததை விட நாட்டில் உணவு பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது , ஜிஎஸ்டி வரி மாற்றம் மேலும் விலைகளை குறைத்துள்லது எனவே வரும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக crisil அமைப்பு கூறுகிறது.
ICRA அமைப்பின் மூத்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர் நுகர்வோர் விலை குறியீடு பண வீக்கத்தை பார்க்கும் போது மேலும் ஒரு வட்டி குறைப்புக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் . 25 அடிப்படை புள்ளீகள் வரை வட்டி குறைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications