இந்தியாவில் AI புரட்சி!! பெங்களூரு வருகிறார் Anthropic CEO.. ரிலையன்ஸ், இன்போசிஸ் தலைவர்களை சந்திக்க முடிவு!

ஏஐ தொழில்நுட்பத்தில் யார் முன்னிலை வகிப்பது என்ற போட்டி உலக டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. ஓபன் ஏஐ, பெர்பிளெக்சிட்டி போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் அனைத்துமே கூகுள், மைக்ரோசாப்ட் , மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு பெரிய சவால்களை ஏற்படுத்திருக்கின்றன . இவற்றில் Anthropic நிறுவனமும் இணைந்து இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக வேகமாக வளர்ந்து வருகிறது Anthropic ஏஐ நிறுவனம் . இந்த நிறுவனம் தன்னுடைய Claude AI மூலம் இந்தியாவில் ஏற்கனவே கால்பதித்து விட்டது. இதனை மேலும் விரிவாக்கம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்த நிறுவனம் தன்னுடைய முதல் அலுவலகத்தை பெங்களூருவில் திறக்க இருக்கிறது .

பெங்களூரு வருகிறார் Anthropic CEO.. ரிலையன்ஸ், இன்போசிஸ் தலைவர்களை சந்திக்க முடிவு!

Anthropic நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டேரியோ அமிடோய் இதற்காக இந்தியாவிற்கு இந்த வாரம் வருகை தருகிறார் . அவருடைய இந்த பயணம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பயணமாக மாறி இருக்கிறது . அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஆந்திராபிக் ஏஐ நிறுவனம்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய இந்த நிறுவனம் அடுத்ததாக இந்தியாவின் மீது கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் ஏஐ எக்கோ சிஸ்டம் உலக அளவில் ஏஐ மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மையமாக மாறி இருக்கிறது என தெரிவித்திருக்கிறது.

இந்நிறுவனத்தின் கிளாட் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. எனவே இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வது பெரிய அளவில் தங்களுக்கு லாபம் கொடுப்பதாக இருக்கும் என கருதுகிறது . இதன் காரணமாகவே நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய அலுவலகத்தை நிறுவி செயல்பாடுகளை மேம்படுத்த இருக்கிறது.

ஆசிய பிராந்தியத்தில் டோக்கியோவுக்கு அடுத்ததாக பெங்களூர் அலுவலகம் தங்களின் இரண்டாவது பெரிய அலுவலகமாக செயல்படும் என ஆந்திராபிக் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த வாரம் இதற்காக வருகை தரக்கூடிய தலைமை செயல் அதிகாரி பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை சந்தித்து இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப விரிவாக்கத்தில் கூட்டணி அமைத்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இது தவிர அவர் பெங்களூருவில் இருக்கும் இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்கும் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நந்தன் நீலகேணி இவருக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டெலிஜன்ஸ் என்ற பெயரில் ஒரு ஏஐ பிரிவை உருவாக்கி இருக்கிறது. இதில் இணைந்து செயல்பட ஆந்திராபிக் அடி போடுவதாக தெரிகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை பெரிய ஏஐ நிறுவனங்கள் தங்களின் ஏஐ மாடல்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றன. இதனால் தான் பெர்பிளெக்சிட்டி, கூகுள், போன்றவை போட்டி போட்டு கொண்டு இந்தியா பயனர்களுக்கு சலுகைகளை வழங்கி பயனர்களை விரிவாக்க முயல்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+