அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகான் மற்றும் AI நிறுவனமான ஆந்த்ரோபிக் இடையே கடந்த சில நாட்களாக பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றம் ஆந்த்ரோபிக் தலைவர் டாரியோ அமோடி கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.
அந்திரோபிக் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் கோரி வருகிறார். ஆனால் அந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது.

இதனால் அந்திரோபிக் தற்போது பென்டகான் ஒப்பந்தத்தை இழந்துள்ளது மட்டும் அல்லாமல் டிரம்ப்-ன் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தாக்கி டிரம்ப் கடுமையான பதிவு செய்துள்ளார்.
Anthropic நிறுவனம் சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு தனது AI கருவிகளை வழங்க மறுத்துள்ளது. இதனால் அரசு ஒப்பந்தங்களை இழக்க வேண்டியிருந்தாலும், தனது கொள்கைகளில் இருந்து பின்னடை போவதில்லை என்று இந்நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இந்த நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்த Anthropic நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Dario Amodei. ஜனநாயக மதிப்புகளை பாதிக்கக்கூடிய ராணுவ பயன்பாடுகளை ஏற்பதற்குப் பதிலாக, Pentagon உடன் பணியாற்றுவதை நிறுத்தத் தயார் என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை எளிமையாகச் சொன்னால், ராணுவம் சட்டபூர்வமானது என்று கருதும் எந்தப் பயன்பாட்டிற்கும் முழு சுதந்திரம் வேண்டும் என்பதே அமெரிக்க பாதுகாப்பு துறையின் கோரிக்கை. இதற்கு Anthropic மறுப்பு தெரிவித்தபோது, Pentagon நிறுவத்தை தனது சப்ளைச் செயினில் இருந்து நீக்கலாம் என எச்சரித்தது. ஆயினும் ஆந்த்ரோபிக் இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
Anthropic எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதல் விஷயம் - "மக்கள் மீதான மூழு கண்காணிப்பு". அதாவது, அமெரிக்க பாதுக்காப்பு துறை, அமெரிக்க குடிமக்களின் தகவல்கள், செயல்பாடுகள், தகவல்தொடர்புகள் போன்றவற்றை AI மூலம் பெருமளவில் கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது - "முழுமையான தன்னாட்சி ஆயுதங்கள்". மனித கட்டுப்பாடின்றி இலக்கைத் தேர்வு செய்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்படுவதை நிறுவனம் எதிர்க்கிறது.
இத்தகைய பயன்பாடுகள் தங்களது ஏஐ மாடலை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், பென்டகன் உடனான ஒப்பந்தங்களில் இதுப்போன்ற விஷயங்கள் இடம்பெறவில்லை என்றும், இதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது என்றும் Anthropic தெரிவித்துள்ளது.
Anthropic மறுப்புக்குப் பிறகு, இந்நிறுவனத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் Donald Trump தலைமையிலான நிர்வாகம் எடுத்துள்ளது. அனைத்து அமெரிக்க அரசுத் துறைகளும் Anthropic நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
கூடுதலாக, பெரிய அளவிலான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கம் மற்றும் தனியார் AI நிறுவனம் இடையேயான மிகவும் வெளிப்படையான மற்றும் அரசியல் நிறைந்த மோதலாக மாறியுள்ளது.
அதிபர் டிரம்ப் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தில், "எங்களுக்கு ஆந்த்ரோபிக் தேவையில்லை; அவர்களுடன் மீண்டும் வியாபாரம் செய்ய மாட்டோம்" என்று கூறியுள்ளார். மேலும், தற்போது Anthropic தயாரிப்புகளை பயன்படுத்தும் அரசுத் துறைகளுக்கு ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் முறையாக பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். Anthropic ஒத்துழைக்கவில்லை என்றால், குடியியல் மற்றும் குற்றவியல் விளைவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் வாதம் என்வென்றால் தேசிய பாதுகாப்புக்காக AI கருவிகள் மிகவும் அவசியம். இதற்கு ராணுவத்திற்கு கட்டுப்பாடற்ற அணுகல் தேவை. ஒரு தனியார் நிறுவனம் அமெரிக்க அரசிற்கு இத்தகைய தடை விதிப்பது தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடும் என்பதே அவர்களின் நிலைபாடு. அதே நேரத்தில், Anthropic நிறுவனம் AI பயன்பாட்டிற்கு கடுமையான பாதுகாப்பு வரம்புகள் இருக்க வேண்டும், பெருமளவிலான கண்காணிப்பு அல்லது மனித கட்டுப்பாடற்ற ஆயுத பயன்பாடு ஏற்க முடியாது என வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications