உலகின் முன்னணி AI நிறுவனங்களில் ஒன்றான அந்த்ரோபிக் (Anthropic) ஏற்கனவே ஐடி ஊழியர்களை பெரும் நெருக்கடிக்கு தள்ளியிருக்கும் வேளையில், இன்று இந்தியவின் ஐடி தலைநகரமான பெங்களூருவில் தனது முதல் இந்திய அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
இது ஆசியாவில் டோக்கியோவுக்குப் பிறகு அந்த்ரோபிக்-கின் இரண்டாவது அலுவலகமாகும். Claude தளதத்தை பயன்படுத்துவோர் மத்தியில் உலகளாவில் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், அந்த்ரோபிக் இந்தியாவில் அலுவலகத்தை திறந்து நேரடியாக சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் Claude பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கணினி மற்றும் கணிதம் சார்ந்த பணிகளில், அதாவது மென்பொருள் உருவாக்குதல், சிஸ்டம்-ஐ நவீனமயமாக்குதல், போன்றவற்றில், உலக அளவில் கிட்டத்தட்ட பாதி பயன்பாடு இந்தியாவிலிருந்து வருவதாக அந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
இதனாலேயே இந்தியாவில் அலுவலகத்தை திறக்க முடிவு செய்தது அந்த்ரோபிக், பெங்களூரில் அலுவலகத்தை திறப்பதாக அக்டோபர் 2025-ல் அறிவித்ததிலிருந்து, இந்தியாவில் இருந்து இந்நிறுவனத்தின் வருவாய் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் இந்திய ஊழியர்களும், இந்திய நிறுவனங்களும் எந்த அளவுக்கு கிளாட் தளத்தை பயன்படுத்தப்படுகிறது என தெரிகிறது.
ரூட்டு தலை யார்..?
பெங்களூரு அந்த்ரோபிக் அலுவலகத்தை நிர்வாகம் செய்யப்போவது இந்தியாவின் நிர்வாக இயக்குநராக Irina Ghose என்பவர் தான். மைக்ரோசாப்ட் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்ப மற்றும் வணிக அனுபவத்தைக் கொண்டவர்.
பெங்களூரில் அலுவலகத்தை திறந்தது மூலம் அந்த்ரோபிக் அதிகளவிலான இந்தியர்களை பணியில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்களுடன் கூட்டணி
அந்த்ரோபிக் இந்தியாவில் பல முக்கிய நிறுவனங்களுடன் ஏஐ சேவைகளுக்காக கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான Air India, Claude Code-ஐப் பயன்படுத்தி தனது செயல்பாட்டுக்கான சிறப்பு மென்பொருளை விரைவாக உருவாக்கி, இதன் மூலம் AI முகவர்கள் உருவாக்கி செலவுகளைக் குறைத்து வருகிறது.
மேலும் பேமென்ட் தளமான Cred நிறுவனம் புதிய அம்சங்களை இரட்டிப்பு வேகத்தில் அறிமுகம் செய்ய முக்கியமாக கிளாட் இருந்து வருகிறது, சோதனை கவரேஜை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
Cognizant உலகளவில் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு Claude-ஐ வழங்கி, பழைய அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
ஸ்டார்ட்அப் துறையில் Razorpay ரிஸ்க் மற்றும் மோசடி கண்டறிதல் அமைப்பில் Claude-ஐ இணைத்துள்ளது.
Enterpret மற்றும் Emergent போன்ற ஸ்டார்ட்அப்கள் Claude-ஐப் பயன்படுத்தி AI உதவியாளர்களை உருவாக்கி, ஆண்டு வருவாயை 25 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
அந்த்ரோபிக்-ன் பெங்களூர் அலுவலகம் மூலம் இனி உயர்தரமான ஏஐ சேவைகள் கைக்கு எடுக்கும் தொலைவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்களுடைய சிக்கலான பணிகளுக்கு ஏஐ சேவையை எளிதாக பெற முடியும். இதேபோல் இன்போசிஸ், டிசிஎஸ் செய்ய முடியாத பணிகளை குறைந்த செலவில் அந்த்ரோபிக் செய்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது நடந்தால் இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது அடுத்த கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications