AI நிறுவனத்திலேயே AI-க்கு வேலை இல்லை..! மனிதர்களை வலைவீசி வேலைக்கு எடுக்கும் anthropic நிறுவனம்..!!

உலகின் முன்னணி ஏஐ நிறுவனம் ஆந்த்ரோபிக். இதன் கிளாட் செயலி சாப்ஃட்வேர் நிறுவனங்களை எல்லாம் ஆட்டுவிக்கிறது. 3 மாதங்களில் எழுதும் கோடிங்கை கிளாட் 1 நிமிடத்தில் முடிக்கிறது. மனிதர்களின் பல வேலைகளை கிளாட் சில நொடிகளில் முடிக்கிறது. கிளாட் செயலியில் ஒரு பிராம்ப்ட் கொடுத்தாலே நிமிடத்திற்கு பல கட்டுரைகளை எழுதி கொடுக்கும். ஆனால் ஆந்த்ரோபிக் நிறுவனமோ கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து மனித எழுத்தாளர்களை தேடி வருகிறது.

ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய மனித எழுத்தாளரை தேடி வருகிறோம் என விளம்பரம் செய்துள்ளது. இந்த வேலைக்கு ஆண்டுக்கு சுமார் 3.2 கோடி முதல் 3.25 கோடி ரூபாய் வரை சம்பளம்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் Executive Communications Writer என்ற பணியிடத்திற்கு ஆட்களை தேடி வருகிறது.

AI நிறுவனத்திலேயே AI-க்கு வேலை இல்லை..! மனிதர்களை வலைவீசி வேலைக்கு எடுக்கும் anthropic நிறுவனம்..!!

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்நிறுவனம், தனது பெரிய அளவிலான உத்திகள் மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கு மனிதர்களின் தனித்துவமான எழுத்து திறன் (Human Touch) தேவை என கருதுகிறதாம். இதற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம்ன் கொடுக்க தயாராக உள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த எழுத்து பணியில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகளுக்கு மேல் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆராய்ச்சி குறிப்புகள் முதல் வேகமாக மாறிவரும் நடப்பு செய்திகள் வரை அனைத்து விவகாரங்களிலும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ குரலாகவும், சிந்தனை வெளிப்பாடாகவும் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Also Read

வெளிநாட்டு ஊழியர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர்களுக்கு விசா ஸ்பான்சர்ஷிப் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அனைத்து வேலைகளையும் ஏஐ மயமாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏஐ நிறுவனத்தின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கும் பங்குதாரர்களுக்கும் துல்லியமாகவும், மனித தன்மையோடும் கொண்டு சேர்க்க ஒரு மனித எழுத்தாளருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படுவது தொழில்நுட்ப உலகத்தில் பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

ஏஐ நிறுவனத்திலேயே ஏஐக்கு வேலை இல்லை என பலரும் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். என்னதான் ஏஐ நம் வேலைகளை நொடியில் முடித்தாலும் அதில் ஒரு இயந்திரத்தனம் இருக்க தான் செய்கிறது, மனிதர்களுக்கு நிகராக ஏஐ வர முடியாது என்பதே இந்த செய்தி நமக்கு உணர்த்தும் பாடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+