செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புரட்சி ஏற்படுத்தி வரும் ஆந்த்ரோபிக் நிறுவனம் இப்போது உலகின் மிக மதிப்புமிக்க AI நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 2021இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வெறும் 5 ஆண்டுகளிலேயே 380 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் மதிப்பு உயர்வதில் ஆச்சரியப்பட தேவையில்லை, இந்நிறுவனத்தின் சேவை தற்போது பல கோடி மக்களுக்கும், டெக் ஊழியர்களுக்கும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் முக்கியமானதாக மாறியிருப்பது மட்டும் அல்லாமல் வலுவான வாடிக்கையாளர் தளத்தை பெற்று வருகிறது. தற்போதைய கவலையே இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை தான்.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றின் மொத்த சந்தை மதிப்பை கணக்கிடும் போது 240 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
டெக் சேவையில் இந்தியாவையும், இந்தியர்களையும் மிஞ்ச யாருமில்லை என மார்தட்டி வந்த நிலையில், 30-40 வருடங்களாக இந்திய பொருளாதாரத்தை செதுக்கி வந்த ஐடி நிறுவனங்களின் மொத்த மதிப்பை 5 வருடத்திற்கு முன்பு உருவான ஒரு நிறுவனம் தகர்த்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
AI-யின் வேகமான உயர்வு
2021இல் தொடங்கப்பட்ட ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த மாதம் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை திரட்டியது. இந்த நிதி திரட்டல் போது, இந்நிறுவனத்தின் மதிப்பை கணக்கிடும் பணி நடந்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த நிதி திரட்டும் சுற்றை காட்டிலும் இரண்டு மடங்கு அதிக மதிப்பீட்டில் முதலீட்டாளர்கள் பணத்தை கொட்ட தயாராக இருந்தனர்.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது 380 பில்லியன் டாலர் அளவை எட்டியது. இது AI துறையில் முதலீட்டாளர்களின் பெரும் ஆர்வத்தைக் காட்டுகிறது. கிளாட் (Claude) என்ற சாட்பாட் உருவாக்கிய இந்நிறுவனம், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. இதன் வளர்ச்சி வேகம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பீடு
இந்தியாவின் ஐடி சேவை நிறுவனங்கள் உலக அளவில் மிகப்பெரியவை. ஆயினும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 240 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே உள்ளது.
ஆனால் 5 ஆண்டுகளே ஆன ஆந்த்ரோபிக் இந்த தொகையை முந்திவிட்டது. இது AI தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதையும், ஐடி சேவை மாடல் மாற்றத்தை சந்திக்கிறது என்பதையும் காட்டுகிறது. AI ஆட்டோமேஷன் மூலம் ஐடி சேவைகளின் பெரும் பகுதியை மாற்றி வருகிறது.
இந்திய ஐடி துறைக்கு என்ன பொருள்?
இந்தியாவில் பொருளாதாரத்தில் ஐடி துறை முக்கிய அங்கம். இது ஆண்டுக்கு 200 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் AI போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஐடி சேவை ஒப்பந்தங்களை குறைக்கலாம் என அச்சறுத்தல் இருக்கும் காரணத்தால் இத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்வது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. இது ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்புகளையும், நிறுவனங்களின் வருவாயையும் பாதிக்கலாம். ஆனால் இதே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என நம்பிக்கையும் சந்தையில் உள்ளது.
இதனால் இந்திய ஐடி துறை எப்படி இந்த சவாலை எதிர்கொண்டு முன்னேறும் என்பதே இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி.
More From GoodReturns

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications