முகேஷ் திருபாய் அம்பானி 1957, 19 ஏப்ரலில் பிறந்தார். ஒரு இந்திய கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் ஆவார், அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் . அவர் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் உலகின் 9வது பணக்காரர் ஆவார். அவரின் குடும்பம் வசிக்கும் ஆன்டிலியா, இந்தியாவின் மட்டுமல்ல, உலகின் விலையுயர்ந்த வீட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள இந்த மாளிகை, 173 மீட்டர் உயரத்துடன் மும்பையின் பிரமாண்ட அடையாளமாக விளங்குகிறது.
இந்த வீடு 27 தளங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய தளங்களைக் கொண்ட ஆன்டிலியாவின் பாதி பகுதி பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பானி குடும்பத்தினர் வீட்டின் 27வது மாடியில் வசிக்கிறார்கள். முதல் ஆறு தளங்கள், அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

இது ஒரு வீடு மட்டுமல்ல, ஒரு தனி உலகம் என்று சொல்லலாம். ஏனெனில், இது ஒரு சாதாரண வீடு போல இல்லாமல், உலகத்தரம் வாய்ந்த வசதிகளால் நிரம்பியிருக்கிறது. இது போன்ற ஆடம்பர வசதிகள், பலருக்கும் கனவாகவே இருக்கும்.
அதில் ஒரு பிரமாண்ட கோயில் ஒன்று உள்ளது. முகேஷ் அம்பானி குடும்பம் மிகவும் பக்தியுடன் வழிபடுபவர்கள். அவர்களுக்காக ஆன்டிலியாவில் அழகான கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் மற்றும் அழகான சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. இது அம்பானி குடும்பம் தினமும் பூஜை செய்யும் அமைதியான இடமாக விளங்குகிறது.
ஆன்டிலியாவின் இன்னொரு முக்கிய அம்சம் தனியார் திரையரங்கம். இதில் 50 பேர் அமரலாம், மேலும் மிக உயர்ந்த தரத்தில் சினிமா அனுபவம் தரும் வசதிகள் உள்ளன. கூடுதலாக, பிரமாண்டமான விருந்துகளுக்காக ஒரு பெரிய பால்ரூம் (Ballroom) அமைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
உடல் நலன் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை முன்னிலைப்படுத்தும் அம்பானி குடும்பத்தினர், வீட்டிலேயே ஸ்பா, யோகா மையம் மற்றும் அழகு நிலையம் அமைத்துள்ளனர். இது அவர்களுக்கு விடுமுறைத் தேவையின்றி வீட்டிலேயே ஓய்வெடுக்க உதவுகிறது.
மும்பை நகரம் மிகப்பெரிய மக்கள் நெரிசல் மற்றும் பெரும் மாசு கொண்ட நகரமாக உள்ளது. இதனால் ஆன்டிலியாவில் மிக அழகாக தொங்கும் தோட்டம் (Hanging Garden) உருவாக்கப்பட்டுள்ளது. இது மாலையில் அமைதியாக சுத்திப்பார்பதற்க்குச் செல்ல ஏற்ற இடமாகும்.
மும்பையில் வெப்பமான காலநிலை நிலவும். அதனால் ஆன்டிலியாவில் ஒரு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஒரு பொத்தானை அழுத்தினால் பனி விழும்! மேலும், குடும்பத்தினருக்காக தனியார் ஐஸ்கிரீம் பார்லர் உள்ளது, அங்கு புதியதாக தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது.
ஆன்டிலியா என்பது வெறும் வீடு அல்ல, ஒரு வாழ்க்கைமுறை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களிள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்காக, உச்சமான ஆடம்பரத்துடன் இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆகாசத்தை தொட்டுக்கொள்ளும் கட்டிடக்கலை, உலகத் தரமான வசதிகள், மற்றும் கண்கொள்ளாக் காட்சிகள் உள்ளதால், இது உலகின் மிகப்பெரிய ஆடம்பர வீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஆடம்பர வாழ்க்கையின் அடையாளமாகவும் ஆன்டிலியா விளங்குகிறது.


Click it and Unblock the Notifications