Man's World இதழின் இணை நிறுவனர் மற்றும் அதிநவீன மற்றும் நேர்த்தியின் அளவுகோலாக மாறியுள்ள ஆடம்பர வாழ்க்கை முறை இதழான Verve இன் நிறுவனர் அனுராதா. இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது, இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக இருந்தாலும், சமுக வலைத்தளம் மூலம் மக்களுடன் நெருங்கியிருக்கும் ஆனந்த் மஹிந்தாவின் மனைவி தான் அனுராதா.
அனுராதாவின் கதை பரபரப்பான மும்பை நகரில் இருந்து தொடர்கிறது. பாரம்பரியமான ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். விரைவிலேயே அவர் ஆனந்த் மகிந்திரா என்ற இளைஞரை தனது வாழ்க்கையில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனந்த் மகிந்திரா இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழில் அதிபர்களில் ஒருவர். சோபியா கல்லூரியில் சைக்காலஜி மாணவியாக இருந்த அனுராதாவின் வாழ்க்கையில் விதி ஆனந்த் மகிந்திராவுடன் கொண்டு இணைத்தது.
பல கஷ்ட சூழ்நிலைகளிலும் அவர்களது காதல் செழிப்பாக வளர்ந்தது. ஆனந்த் அப்போது ஒரு முனைப்புடன் இருந்த மாணவர். தனது படிப்புக்காக ஒரு மாணவர் படத்தைத் தயாரிக்கும் பணியில் இருந்தார். அந்த இளஞ்ஜோடிகளின் அன்புக்கு எல்லையே இல்லை. படித்துக் கொண்டிருக்கும்போதே தான் விரும்பிய பெண்ணுடன் வாழ்வதற்காக ஒரு செமஸ்டரை தியாகம் செய்தார். அவர்களது காதல் அவர்களது வெற்றிக்கு அடித்தளம் போட்டது.
தனது பாட்டியின் மோதிரத்தை தந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நாவல்களில் வருவது போல அனுராதாவிடம் கேட்டார் ஆனந்த். இதுவரை தனது விருப்பமான நகையாக அதை அனுராதா போற்றிப் பாதுகாத்து வருகிறார்.
அவர்களது காதல் கதை அமெரிக்காவுக்கு இருவரையும் இட்டுச் சென்றது. அங்கு அனுராதா கம்யூனிகேஷன் படிப்புக்காக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அமெரிக்காவில் அவர் கற்றுத்தேர்ந்த அனுபவங்களும் பாடங்களும் அவரை ஜர்னலிஸத்தில் முக்கியப் பங்கு ஆற்ற உதவியது.
அனுராதாவின் இதழியல் பயணத்தில் 'Man's World' என்ற இதழை அவர் கூட்டாகத் தொடங்கினார். இந்த இதழ் விரைவிலேயே நாடுமுழுவதும வாசகர்களின் இதயத்தைக் கவர்ந்தது. ஷாரூக் கானின் அறிமுகம் பற்றிய செய்தி அந்த இதழின் பேர் சொல்லு்ம் கட்டுரையாகும். அனுராதாவின் படைப்பு ஆர்வம், திறமை அந்த இதழுக்கு பெரும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. ஆண்களின் லைப்ஸ்டைல் பற்றிய இதழ்களில் முன்னணியில் இருந்தது.
இதைத் தொடர்ந்து அவர் வெர்வ் என்ற லைப்ஸ்டைல் இதழைத் தொடங்கினார். எடிட்டர் இன் சீப்பாக இருந்த அனுராதா இதழியலில் பெரும் சாதனையைப் படைத்தார்.
படைப்புலகின் வசீகரமாக உயர்ந்த அனுராதா இலக்கியத்திலும் சிறப்பாக விளங்கினார். படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர் ஹாருகி முரகாமி, கேப்ரியல் கார்சியா மார்குவெஸ், விஎஸ் நைபால் போன்றோரின் படைப்புகளை கரைத்துக் குடித்தார். நூல்களின் மீதும் இலக்கியத்தின் மீதும் அனுராதா மாறப் பற்று வைத்துள்ளார்.
அனுராதாவுக்கு கொடை உள்ளம் உண்டு. கே.சி.மகிந்திரா கல்வி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான அவர் ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு உதவிகளைப் புரிந்துள்ளார்.
கலையை மேம்படுத்துவதிலும் அனுராதா ஆர்வம் கொண்டிருந்தார். ARTISANSனின் ஆலோசகர் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். உள்நாட்டு கலை மற்றும் கைத்தொழிலை மேம்படுத்தும் பணியில் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்.


Click it and Unblock the Notifications