மும்பை: இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோரது பாதுகாவலரின் பெயர் சோனு. இவர் பல ஆண்டுகளாக அனுஷ்கா சர்மா உடன் இருந்து வருகிறார். இப்பொழுது அவர் விராட் கோலிக்கும் பாதுகாவலராகப் பணியாற்றுகிறார். இவருக்கு என்ன சம்பளம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் 2024 ஆர்சிபி தொடக்க வீரருமான விராத் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா, ஆகியோர் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க ஜோடிகளில் ஒருவர் ஆவார்கள். மேலும், பெரும்பாலான ரசிகர்கள் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கின்றனர். சான்றாக பிரபலங்கள் வைத்திருக்கும் பேக் விலை, அவர்களின் சம்பளம், அவர்களின் பாதுகாவலரின் சம்பளம், அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடியை, பொது இடங்களில் பார்த்தால் சேர்ந்து செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களையும், அவர்களது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இதனால்தான் அவர்களின் தனி உரிமையை பாதுகாக்க விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா மற்றும் அவர்களது குழந்தைகளுக்காகவும் நம்பகமான பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவர்கள் வெளியில் செல்லும்போது ரசிகர்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டால், சில நேரங்களில் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடும். எனவே, இத்தகைய பாதுகாப்பு அத்தியாவசியமான ஒன்றாக பெரும்பாலான பிரபலங்களுக்கு இருக்கிறது.
இந்தப் பதிவில் அத்தகைய பாதுகாப்பை வழங்கும் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் பாதுகாவலரைப் (Body Guard) பற்றிப் பார்ப்போம். அவர்கள் இருவரின், பாதுகாவலர் பெயர் சோனு. இவர் பல வருடங்களாக அனுஷ்கா ஷர்மாவிற்கு பாதுகாவலராக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் விராட் கோலிக்கும் சேர்ந்து பாதுகாவலராக பணியாற்றுகிறார். சோனுவின் உண்மையான பெயர் பிரகாஷ் சிங். இவர்களின் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதால், சோனு அவர்களிடமிருந்து அதிக சம்பளத்தையும் பெறுகிறார்.
2017 ஆம் ஆண்டிற்கு முன்பே, அதாவது விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்வதற்கு முன்பிலிருந்து, சோனு, அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலராக இருந்து வருகிறார். பல்வேறு அறிக்கைகளின்படி சோனு என்று சொல்லப்படுகிற பிரகாஷ் சிங்கின் ஆண்டு வருமானம் 1.2 கோடி ஆகும். அதாவது இது நாட்டில் உள்ள பல IT நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பெறும் சிடிசி ஐ விட அதிகமாகும்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா, இருவரும் சோனுவுடன் ஆழமான நட்பில் உள்ளனர். மேலும் அவரை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருதி வருகின்றனர். அவரது பிறந்த நாளை இருவரும் சேர்ந்து ஆடம்பரமாக கொண்டாடி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டில் அனுஷ்கா சர்மா "ஜீரோ" படப்பிடிப்பில் இருந்தபோது, அந்த செட்டில் சோனுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஃபோட்டோக்கள் இணையதளங்களில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications