அமராவதி: ஆந்திர அரசு அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆறு முக்கிய கொள்கைகளை அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கக்கூடிய இந்த ஆறு கொள்கைகள் மூலம் மாநிலத்தில் தொழில்துறை மேம்படுவதோடு மட்டுமில்லாமல் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆந்திர தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கை 4.0, ஆந்திர MSME & தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கொள்கை 4.0, ஆந்திர உணவு பதப்படுத்தும் கொள்கை 4.0, ஆந்திர மின்னணுவியல் கொள்கை 4.0, ஆந்திர தொழில் பூங்கா கொள்கை 4.0 மற்றும் ஆந்திர 4.0 ஒருங்கிணைந்த பசுமை எரிசக்தி கொள்கை என ஆறு கொள்கைகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். ஆந்திர அரசு இந்த 6 முக்கிய கொள்கைகளை 'கேம் சேஞ்சர்' கொள்கைகள் என அழைக்கிறது.

இதன் மூலம் ஆந்திராவில் அன்னிய நேரடி முதலீடுகளில் 10 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது ஆந்திர உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு 3.4 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,இது 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ.7.3 லட்சம் கோடியாக உயரும் என்றும், 5 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் என்றும் ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் ஏற்றுமதி 20 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உருவாகும் பிராண்டுகளை உலகளவில் கொண்டு செல்வது, தொழில் தொடங்குவதை எளிதாக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க அனுமதிக்கும் முறை ஒற்றை சாளரத்தின் கீழ் கொண்டு வரப்படும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவ பிரத்தியேகமான முதலீட்டு வசதிக் குழு அமைக்கப்பட உள்ளது.
மாநிலத்தில் தொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். முதல் 200 முதலீட்டாளர்களுக்கு 62 சதவிகிதம் வரையிலும், உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடும் மதிப்பு கூட்டல் முதலீட்டாளர்களுக்கு 72 சதவிகிதம் வரையிலும் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறையில் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் 30,000 புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க ரூ.30,000 கோடி முதலீடுகள் இலக்கு வைக்கப்படும் என கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் ட்ரோன் உற்பத்தி, மின்சார வாகனங்கள், நகைகள், பொம்மைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் பிற துறைகளில் ஒரு தொழில் பூங்கா இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
ரத்தன் டாடாவின் பெயரில் அமராவதியில் இன்னோவேஷன் ஹப் அமைய இருக்கிறது. விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா அல்லது குண்டூர், திருப்பதி மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் பிராந்திய மையங்களும் அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications