கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாகக் காலத்தில், நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ரியல் எஸ்டேட் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்த பின்பு பல்வேறு காரணங்களுக்காக அப்பார்ட்மென்ட் விற்பனை சிறப்பான வளர்ச்சியை அடைந்து.
இதுமட்டும் அல்லாமல் நீண்ட காலமாக விற்பனை செய்ய முடியாமல் இருந்த வீடுகள் அனைத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொடுத்த அதிரடி ஆஃபர் மூலம் விற்பனை ஆனது.
வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை
ரியல் எஸ்டேட் பிற துறைகளைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை அடையும் எனக் கணிக்கப்பட்டு வரும் நிலையில் சந்தை ஆய்வாளர்கள் ரியல் எஸ்டேட் துறையில் சரிவு ஏற்படும் தொடர்ந்து இதேபோன்ற வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியாது என எச்சரித்து வருகின்றனர்.
சந்தை ஆய்வாளர்கள்
லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்குப் பின் ஏற்பட்ட விற்பனை உயர்வு என்பது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம் போன்றது. சந்தை ஆய்வாளர்களின் கணிப்பின் படி அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரியல் எஸ்டேட் விற்பனை செப்டபமர் காலாண்டை விடவும் சிறப்பாக இருக்கும் எனக் கணித்துள்ளனர்.
வளர்ச்சியில் தொய்வு
இதேவேளையில் இந்த வளர்ச்சி அடுத்த ஆண்டில் பாதியாகக் குறைந்து விடும் எனக் கணித்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் முதல் முறையாக வீடு வாங்குவோர் வாயிலாகவும், வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவாக இருக்கும் காரணத்தால் என்ஆர்ஐ-கள் அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளதன் வாயிலாக ரியல் எஸ்டேட் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மார்ச் காலாண்டு
ஆனால் இந்த அதிரடி வளர்ச்சி அதிகப்படியாக மார்ச் மாதம் அதாவது 2020-21ஆம் நிதியாண்டு வரையில் மட்டுமே தொடரும் எனக் கணித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது Ready to Move பிரிவில் இருக்கும் வீடுகள் தான்.
95 சதவீதம் வரையில் பாதிப்பு
மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த வர்த்தகம் 95 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு இத்துறை சார்ந்த ஊழியர்களும், வர்த்தகர்களும் அதிர்ச்சி அடைந்தன.
ஏப்ரல்- ஜூன் காலாண்டு
இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலகட்டமான ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வெறும் 9632 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் - செப்டம்பர் காலாண்டில் சுமார் 33,403 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் அதே காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 50 சதவீதம் மட்டுமே என்பது கூடுதல் தகவல்.
விழாக்கால விற்பனை
லாக்டவுன் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து நிதி நெருக்கடி இருந்தாலும், நாடு முழுவதும் விழாக் காலம் முன்னிட்டு பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இதோடு நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும் பல்வேறு சலுகைகள் விலை தள்ளுபடிகள் கொடுக்கப்பட்ட காரணத்தால் கடந்த 2 காலாண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை அதிகளவிலான விற்பனையைப் பெற்று வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications