இந்தியாவின் நியாய வர்த்தகக் கட்டுப்பாட்டு ஆணையமாக CCI அமைப்பின் நான்கு ஆண்டுக்கால விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைச் சங்கிலி நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தைப் பயன்படுத்திப் போட்டி வர்த்தகச் சந்தை சட்டங்களை மீறி மருத்துவச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு மக்களிடம் இருந்து அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளது ஏமாற்றியுள்ளது.
இதற்கான அபராதம் எவ்வளவு தெரியுமா..?
CCI அமைப்பு
CCI அமைப்பு தனது விசாரணைகளின் முடிவுகளையும், பல்வேறு கேள்விகளுக்குமான விளக்கத்தையும் அப்பல்லோ மருத்துவமனைகள், மேக்ஸ் ஹெல்த்கேர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, பாத்ரா மருத்துவமனை & மருத்துவ ஆராய்ச்சி மற்றும் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனை ஆகியவற்றிடம் கேட்டுள்ளது.
10 சதவீத தொகை அபராதம்
இதற்கான விளக்கத்தைக் கேட்ட பின்பு CCI அமைப்பு இந்த மருத்துவமனைகளில் கடந்த 3 வருடங்களுக்கான சராசரி விற்றுமுதல் அதாவது turnover தொகையில் 10 சதவீத தொகை வரையில் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை
இதன் படி அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் கடந்த 3 வருடத்தின் சராசரி turnover தொகை 12,206 கோடி ரூபாய், இதேபோல் போர்டிஸ் turnover தொகை 4,834 கோடி ரூபாய். இதில் 10 சதவீதம் என்றால் பெரும் தொகை அபராதமாக இருக்கும், இது இந்நிறுவனங்களின் பங்கு விலையை அதிகளவில் பாதிக்கும்.
NCR பகுதி
NCR பகுதியில் இயங்கும் இந்த மருத்துவமனை சங்கிலிகளின் 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கிளைகளில் அறை கட்டணம், மருந்துகள், மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் நுகர்பொருட்களுக்கு "நியாயமற்ற மற்றும் அதிகப்படியான விலைகளை" வசூலிப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக CCI அமைப்பின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அறை வாடகை
சில மருத்துவமனை அறை வாடகைகள் 3-நட்சத்திர மற்றும் 4-நட்சத்திர ஹோட்டல்களால் வசூலிக்கப்படுவதை விட அதிகமாக வசூலித்துள்ளது. இந்த 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கிளைகளில் 6 மேக்ஸ் ஹெல்த்கேர் கிளைகள், 2 போர்ட்டீஸ் மருத்துவமனை உடையது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications