அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸின் பங்கு விலையானது, அதன் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானதையடுத்து 12.46 சதவீதம் அதிகரித்துள்ளது.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 49.14 சதவீதம் அதிகரித்து, 134.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செலவினம் குறைவு என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டில் இந்த நிறுத்தின் நிகரலாபம் 89.95 கோடி ரூபாயாக இருந்துள்ளது என்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு செலவினங்கள் 2,595.54 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 2,776.46 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாபமானது 2,759.84 கோடி ரூபாபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த லாபமானது மறுஆய்வில் உள்ளதாகவும், இதனால் மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இந்த லாபமானது 2,911.74 கோடி ரூபாயாக லாபம் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது.
செலவு குறைப்பு காரணமாக இந்த நிறுவனத்திற்கு டிசம்பர் 31, 2020வுடன் முடிவடைந்த 9 மாத காலத்தில் 200 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே அடுத்தாண்டில் இந்த செலவுகளை 100 - 125 கோடி ரூபாய் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தான் இந்த பங்கின் விலையானது 342.55 ரூபாய் அதிகரித்து (அல்லது) 12.46% அதிகரித்து 3090.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று 52 வார உச்சமான 3127 ரூபாயினை தொட்டுள்ளது.
இந்த ஹாஸ்பிட்டல்ஸின் தேவையானது அதிகம் உள்ளது என்பதால், நிபுணர்கள் இந்த பங்கின் விலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர். அதோடு இந்த நிறுவனத்தின் மார்ஜின் தொகையும் வலுவாக உள்ளது. ஆக இதுவும் இந்த பங்கு விலைக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸின் பங்கு விலையானது 3,160 ரூபாயினை தொடலாம் என கிரெடிட் சூசி கணித்துள்ளது.
இதே இன்னும் சில புரோக்கிங் நிறுவனங்கள் கொடுத்த கணிப்பினையும் மீறி, இந்த பங்கின் விலையானது உச்சத்தில் இருந்து வருகிறது. இது கொரோனாவின் காராணமாக இதன் தேவை அதிகரித்திருந்த நிலையில், இந்த பங்கின் விலையானது சிகரம் தொட்டு வருகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications