கொரோனா எதிரொலி.. வருவாய் குறைவால் அப்பல்லோ டயர் ஊழியர்களுக்கு 25% வரை சம்பள குறைப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி டயர் நிறுவனமான அப்போலோ நிறுவனம், இருசக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து டயர்களையும் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10,064 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 2,47,592 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முக்கியமான சந்தைகளில் கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக வணிகத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊதியம் குறைப்பு

ஊதியம் குறைப்பு

இந்த நிலையில் டயர் உற்பத்தியில் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தியாளரான அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிர்வாகம் 15 - 25% ஊதியக் குறைப்பினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் ஓம்கர் கன்வார் மற்றும் நீரஜ் கன்வார் ஆகியோர் தலா 25% ஊதியக் குறைப்பை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் மூத்த நிர்வாகத்தினர் தங்கள் சம்பளத்தில் 15% குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

வர்த்தகம் முற்றிலும் பாதிப்பு

வர்த்தகம் முற்றிலும் பாதிப்பு

அப்பல்லோ டயர்ஸ் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் பன்னாட்டு இருப்பைக் கொண்டுள்ளது. ஆக உலகளவில் ஊதியக் குறைப்புகள் மூத்த நிர்வாகங்களையும் கொண்டுள்ளது. அதிலும் தற்போது உலகம் முழுவதிலும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸால் வாகனத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பல்லோ டயர்ஸ் மோசமான நிலையை எதிர்கொள்ளக் கூடும். இதனா நிறுவனம் நஷ்டத்தினை எதிர்கொள்ளக் கூடும் என்று ஒர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு

வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு

ஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கத்தினால், வோல்க்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் குரூப் பிஎஸ் ஏ உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலான நாடுகளில் பூட்டப்பட்டதன் விளைவாக தொழில்சாலைகளை மூட முடிவு செய்துள்ளதாக அப்பல்லோவின் வணிகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

ஊதியக் குறைப்பு

ஊதியக் குறைப்பு

வணிகத்தின் மீது கோவிட் -19 வைரஸ் வெடிப்புக்கு பிறகு மோசமான தாக்கத்தால் ஊழியர்களின் ஊதியக் குறைப்பை அறிவிக்கும் இரண்டாவது நிறுவனமாக உள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி விமான நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை அறிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apollo Tyres top management will 15 -25% pay cut

Apollo Tyres one of India’s largest tyre manufacturers, Apollo will take a 15%-25% pay cut, as result of the significant decline in business due to the outbreak of Coronavirus in important markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X