அமெரிக்காவின் ஆப் ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் தடை செய்யப்பட்டது. ஆனால் ஆப்பிள் மற்றும் கூகுள் வியாழக்கிழமை மாலை தங்களுடைய ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் மீண்டும் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். டிக் டாக் ஜனவரி 18-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் ஆப் ஸ்டோர்களில் இருந்து காணாமல் போனது. டிக் டாக் வீடியோக்களை பகிர்வதற்கும், பார்ப்பதற்குமான ஒரு ஆப் ஆகும். உலகெங்கிலும் இந்த ஆப்-பிற்க்கு மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். அமெரிக்காவில் டிக் டாக் பிற நாடுகளை விட இன்னும் பிரபலம்.
டிக் டாக் என்பது சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான ஒரு சமூக ஊடக அப்ளிகேஷன். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் டிக் டாக் செயலி டவுன்லோட் செய்தவற்கு பயனர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு டவுன்லோட் செய்த பயனர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் டிக் டாக் ஆப்-ஐ மீண்டும் தங்களுடைய ஆப் ஸ்டோர்களில் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது.

டிக் டாக் அப்ளிகேஷனில் சில பாதுகாப்பு கவலைகள் எழுந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ஜோ பைடன் டிக் டாக் ஆப்பை வேறு உரிமையாளருக்கு விற்க வேண்டும் அல்லது ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமெரிக்காவில் டிக் டாக்-ஐ தடை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். பல மேல்முறையீடுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் ஜனவரி 17 அன்று டிக் டாக் செயலியை தடை செய்து உத்தரவிட்டது.
டிக்டாக் ஒரு சீன நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது. அதோடு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் சுமூகமாக இல்லாத நிலையில், டிக்டாக் அமெரிக்க பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன அரசாங்கத்திற்கு வழங்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இந்த அச்சத்தின் அடிப்படையில், டிக்டாக்கை தடை செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்தது.
ஜனவரி 20-ஆம் தேதி முதல் டிரம்ப் அதிபராக பதவியேற்றார். அதற்கு முந்தைய நாள் இரவு டிக் டாக் சேவை தடை செய்யப்பட்டது. ஆனால் ஜனவரி 19ஆம் தேதி அமெரிக்காவில் மீண்டும் டிக் டாக் செயலி கிடைக்கத் தொடங்கியது. தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் டிக் டாக் ஆப்-ஐ தற்காலிகமாக தடையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் டிக் டாக்-இன் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் டிக்டாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications