சென்னை: உலகின் முன்னணி டெக் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் தனது தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவின் பாரிக்கை நியமித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிளின் உயர்மட்ட பதவியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ளார். ஆப்பிள் நிர்வாகம் அடுத்த சிஎப்ஓ-வாக யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் இருந்த வேளையில் வெளியிலிருந்து ஒருவரைக் கொண்டு வருவது சரியான முடிவாக இருக்காது என்பதை உணர்ந்து நிறுவனத்தில் இருக்கும் உள்நபரையே நியமித்துள்ளது.
கெவின் பாரிக் ஜனவரி 1, 2025 அன்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகத் தனது பணியைத் துவங்குவார். ஏற்கனவே இப்பதவியில் இருக்கும் லூகா மேஸ்ட்ரி இந்த பதவியிலிருந்து அதே நாளில் நிறுவனத்திற்குள்ளேயே வேறு பதவிக்கு மாற உள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தில் இந்த புதிய தலைமை மாற்றம், அடுத்த சில வாரத்தில் ஆப்பிள் ஐபோன் 16 உட்பட பல தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னதாக நடந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த முறை அறிமுகம் செய்யும் ஆப்பிள் ப்ராடெக்ட்கள் அனைத்திலும் மிகப்பெரிய சாப்ட்வேர் அப்டேட் இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் என்ற பெயரில் புதிய AI அம்சங்களைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது ஆப்பிள். ஆப்பிள் சமீப காலமாக அதன் விற்பனையிலும், பங்கு மதிப்பிலும் தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வரும் வேளையில் கெவின் பாரிக் நியமனம் மற்றும் ஏஐ அப்டேட்கள் இந்த வீழ்ச்சியை தலைகீழாகப் புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் கெவின் பாரிக் 10 வருடத்திற்கும் அதிகமாக பணியாற்றி வருகிறார். புதிய CFO பதவி மூலம் விரைவில் கெவின் பாரிக் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர உள்ளார். இவர் தற்போது நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஆப்பிளுக்கு முன், பாரிக் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் உயர் மட்ட தலைமைப் பதவிகளை வகித்தார்.
CFO பதவியில் இருந்து வெளியேறும் லூகா மேஸ்ட்ரி, ஜனவரி 1, 2025க்கு பின்பு நிறுவன சேவைகள் குழுக்களைத் தலைமை தாங்குவார் என்று ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தகவல் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு மற்றும் நிலம் மற்றும் மேம்பாடு ஆகியவை அடங்கும். இவை தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிக்கை செய்யும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications