உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் 17 சீரிஸ் வகை போன்கள் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை அப்கிரேட் செய்து அடுத்தடுத்த சீரிஸ்களாக வெளியிடுகிறது .
ஐபோன் 17: ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்த சீரிஸ் போன்களை வெளியிடும் போதெல்லாம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன் பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் 17 வகை மாடல் போன்களை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

செப்டம்பர் 9: இந்த ஆண்டு ஐபோன் 17 (Iphone 17) , ஐபோன் 17 ஏர் (Iphoine 17 air) , ஐபோன்17 ப்ரோ (Iphone 17 Pro) மற்றும் இதன் டாப் வேரியண்ட் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (Iphone 17 pro max) ஆகிய நான்கு வகையான போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆண்டுதோறும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தான் தங்களுடைய ஐபோன் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. ஐபோன் 5 லிருந்து தற்போது ஐபோன் 17 வரை ஆப்பிள் நிறுவனம் இந்த செப்டம்பர் என்ற பாரம்பரியத்தை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது.
என்ன வசதி: இந்த முறை ஐபோன் 17ல் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் போட்டி அதிகரித்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் பல நவீன வசதிகளை ஐபோன் 17 சீரிஸில் கொண்டு வந்திருக்கிறதாம். இதில் ஐபோன் 17 ஏர் 5mmக்கும் thin ஆன ஒரு போனாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Gen Z வாடிக்கையாளர்: அடுத்ததாக வடிவமைப்பிலேயே பெரிய அளவு மாற்றம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பெரிய அளவிலான கேமரா மாட்யூல்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் பாரம்பரியமான ஆப்பிள் வடிவமைப்பு முறையில் இருந்து மாற்றங்களை காணலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகளாக ஐபோன்களின் வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய சூழலில் ஜென் ஸீ (Gen Z) வாடிக்கையாளர்களை கவரும் வகையினான வடிவமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: நெக்ஸ்ட் ஜெனரேஷன் வகை மாடல் போன்களாக ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இருக்கும். உலகம் முழுவதுமே தற்போது ஐபோன் ரசிகர்கள் செப்டம்பர் 9ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர். 24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 48 மெகாபிக்சல் டெலிபோடோ கேமரா உள்ளிட்டவை இருப்பதாக சொல்லப்படுகிறது ,ProMotion OLED display, 120Hz refresh rate மற்றும் அதிநவீன ஏஐ வசதி கொண்டதாக இந்த போன்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியுப், எக்ஸ் பக்கங்களில் ஐபோன் 17 வெளியீட்டு விழாவை நாம் நேரலையில் காணலாம். ஐபோன் 17 மாடல் போன்கள் பெரும்பாலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications