உலக அளவில் எத்தனை ஸ்மார்ட் போன் பிராண்டுகள் இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி மவுசு தான் . தற்போது ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை இந்திய சந்தையில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்களை திறந்த பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 15ஆவது காலாண்டாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனையும் வருவாயும் உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வரலாறு காணாத விற்பனையை கண்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவனம் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது என கூறியிருக்கிறார் . குறிப்பாக அமெரிக்கா ,கனடா மட்டுமில்லாமல் மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு , ஜப்பான், கொரியா மற்றும் தெற்காசிய நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அபாரமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய சந்தையான இந்தியாவில் இதுவரை இல்லாத வருவாயை ஆப்பிள் நிறுவனம் எட்டி இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 , ஐபோன் 17 ப்ரோ , ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், ஐபோன் ஏர் உள்ளிட்ட புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்தது. இவை செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்திற்கு நல்ல விற்பனையை ஏற்படுத்தி தந்திருக்கின்றன எனக் கூறியிருக்கிறார் .
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக புதுப்புது நேரடி விற்பனை கடைகளை திறந்து இருக்கிறோம் அது நமக்கு சிறந்த முறையில் லாபம் பெற்று தந்திருக்கிறது எனக் கூறியிருக்கும் டிம் குக், ஜுலை முதல் செப்டம்பர் காலாண்டில் உலகம் முழுவதும் ஐபோன் விற்பனை 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது என கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து வருகிறது. ஐபோன் 16 மற்றும் ஐபோன் 17 மாடல்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன . டிசம்பர் காலாண்டிலும் விற்பனையில் சாதனை படைப்போம் என தெரிவித்துள்ள டிக் குக் இந்த ஆண்டு சிறந்த வருவாய் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 15.5 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்யும் என idc அமைப்பு கணிக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 25% அதிகமாகும் . குறிப்பாக இந்தியாவில் ஐபோன் 17 போன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட செப்டம்பர் மாதத்தில் விற்பனை என்பது 19% அதிகரித்து இருக்கிறதாம்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பெரும்பாலான ஐபோன்கள் தற்போது இந்திய சந்தைகளுக்கே திருப்பி விடப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு பேசிய டிம் குக் ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ மட்டுமில்லாமல் பல்வேறு ஏஐ சார்ந்த நிறுவனங்களோடும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார் . ஆப்பிள் இண்டலிஜென்ஸ் மூலம் சிரியில் பெரிய அப்டேட் கொண்டு வரப்படுவதாகவும் ஆப்பிள் பயனாளர்கள் அடுத்த ஆண்டு முதல் நவீன ஏஐ திறன் கொண்ட சிரியை பயன்படுத்த போகிறார்கள் என டிம் குக் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications