மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் விரைவில் திறக்கப்படும் ஆப்பிள் பிராண்டின் முதல் இந்திய ரீடைல் விற்பனைக் கடையில் ஆப்பிள் ஐபோன், ஏர்பாட்ஸ், ஐபேட் என அனைத்து ஆப்பிள் கருவிகளும் விற்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிகப்படியான வரவேற்பு இருந்தாலும், ஆப்பிள் இந்தியாவில் தொழிற்சாலைகளை துவங்கிய பின்பு அதிகப்படியான உள்நாட்டு விற்பனை பதிவாகிறது.

இந்த நிலையில் தான் ஆப்பிள் தனது விற்பனையை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக விற்பனையை தனது இணையதளத்தின் வாயிலாக துவங்கியது. இதை தொடர்ந்து இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ ரீடைல் ஸ்டோர்-ஐ திறக்க முடிவு செய்துள்ளது. ஆரம்பமே அதிரடியாக இருக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
ஆப்பிள் பிராண்ட் தனக்கே உரிய கொள்கையில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் ஒரு 'பிரத்யேக பகுதியை' குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டும் அல்லாமல் ஆப்பிள் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் குத்தகைக்கு எடுத்துள்ள பகுதியில் தனது போட்டி நிறுவனங்களின் விளம்பரம் இடம்பெற கூடாது என்ற முக்கியமான கண்டிஷன் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர் அமையும் பகுதியில் அமேசான், பேஸ்புக், கூகுள், எல்ஜி, மைக்ரோசாப்ட், சோனி போன்ற 22 போட்டிப் பிராண்டுகள் இந்த exclusive zone-களை ஆக்கிரமிக்கவோ அல்லது எந்த விளம்பரத்தையும் காட்டவோ தடை விதித்துள்ளது. இதற்காக ஆப்பிள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா..?

ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால் மற்றும் ஆப்பிள் மத்தியிலான 11 வருட ஒப்பந்தம் மூலம் சுமார் 20,800 சதுரடியில் இடத்தை ஆப்பிள் பெற உள்ளது. இதற்கு மாதம் 42 லட்சம் ரூபாய் மாத வாடகையும், முதல் 3 வருடத்திற்கு மொத்த வருவாயில் 2 சதவீத பங்கீடும் அளிக்க உள்ளது ஆப்பிள், முதல் 3 வருடத்திற்கு பின்பு 2.5 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு 3 வருடத்திற்கு 15 சதவீத வாடகை உயரும்.


Click it and Unblock the Notifications