ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இந்திய ரீடைல் விற்பனைக் கடையை செவ்வாய்க்கிழமை காலையில் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் அமைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் ஆப்பிள் சிஇஓ நேரில் வந்து திறந்தார்.
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் APPLE BKC என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படுகிறது, BKC என்பது பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் என்பதன் சுருக்கம் தான். இன்று அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு திறக்கப்பட்டாலும், நேற்று இரவு இந்தியாவில் இருக்கும் முக்கியமான பிரபலங்கள், சினிமா ஸ்டார்கள், யூடியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலங்களுக்கு பிரத்தியேகமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் இசை புயல் ஏஆர் ரகுமான்-க்கு சிறப்பு அழைப்பை கொடுத்து APPLE BKC-க்கு வரவேற்றுள்ளது. மும்பை வந்த ஏஆர் ரகுமான் டிம் குக் -ஐ சந்தித்து வாழ்த்து கூறியது மட்டும் அல்லாமல் சினிமா துறையை சேர்ந்த பலரை சந்தித்தார்.
ஏஆர் ரகுமான் மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தியாவின் முன்னணி சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, ஹிந்தி சீரியல் நாகின் நடிகை மௌனி ராய், போனி கபூர், பாலிவுட் நடிகை நேகா தூபியா என பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் விரைவில் திறக்கப்படும் ஆப்பிள் பிராண்டின் முதல் இந்திய ரீடைல் விற்பனைக் கடையில் ஆப்பிள் ஐபோன், ஏர்பாட்ஸ், ஐபேட் என அனைத்து ஆப்பிள் கருவிகளும் விற்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்தாலும், ஆப்பிள் இந்தியாவில் தொழிற்சாலைகளை துவங்கிய பின்பு அதிகப்படியான உள்நாட்டு விற்பனை பாதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தான் ஆப்பிள் தனது விற்பனையை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக விற்பனையை தனது இணையதளத்தின் வாயிலாக துவங்கியது. இதை தொடர்ந்து இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ ரீடைல் ஸ்டோர்-ஐ திறக்க முடிவு செய்து இன்று மும்பையிலும், அடுத்த சில நாட்களில் டெல்லி-யிலும் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களை திறந்துள்ளது.




Click it and Unblock the Notifications