கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் பல நாடுகளும் கதிகலங்கி போயுள்ளன எனலாம். ஏனெனில் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது, அதனைவிட மோசமாக மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மக்கள் பல லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகின் பெரும்பாலான நாடுகளும், இந்த கொரோனாவால் பெரும் இழப்பினை கண்டுள்ளது என்றால் அது தவிர்க்க முடியா உண்மையே.
இதனால் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. எப்படி இருப்பினும் தடுப்பூசிகளும் தற்போது பல அமலுக்கு வந்துள்ளன.
வீட்டில் இருந்தே பணி
இதன் எதிரொலியாக ஏற்கனவே பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. லாக்டவுன் நடவடிக்கைகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்த ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறலாம். ஏனெனில் இனி விரைவில் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என்ற நிலையும் நிலவி வருகின்றது.
பிளெக்ஸி முறையில் பணி
எனினும் பல நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால், இந்த நடைமுறையை நிரந்தரமாக அமல்படுத்தலாமே என கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்கள் பிளெக்ஸி முறையில் பணியாற்றலாம் என்றும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் இன்க் நிறுவனமும், ஊழியர்கள் செப்டம்பர் மாதம் முதல் அலுவலத்திற்கு வரலாம். ஆனால் பிளெக்ஸி முறையில் அலுவலகம் வரலாம் என அறிவித்துள்ளது.
மூன்று நாள் வரவேண்டும்
அதாவது வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. ஐபோன் உற்பத்தியாளர் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் குறைந்தபட்சம் பணியாளர்களை திரும்ப கூறியுள்ளது. இதே புதன் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தியதற்கு மத்தியில், தடுப்பூசிகள் கிடைப்பதையும், இதனால் ஊழியர்கள் போட்டுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். அதோடு தற்போது கொரோனா பரவல் குறையும் விகிதத்தினையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஏனெனில் கொரோனா காலத்திலும் சில ஊழியர்கள் ஆப்பிள் அலுவலகங்களில் தங்கி பணியாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications