உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதனால் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் விற்பனை மற்றும் வருவாய் நடப்பு காலாண்டில் அதிகரித்துள்ளது. "அனைத்து பகுதியிலும் ஐபோன் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பிராடெக் லான்ச்-ம் டெக் உலகைப் புரட்டிப்போடும் வகையில் அமைந்து வருகிறது. அதாவது, கடந்த மே மாதம், ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முதல் மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ததில் இருந்து ஐபேட் ஃப்ரோ அறிமுகம் வகையில் இந்த தாக்கம் இருந்து வருகிறது. அந்தவகையில், அடுத்த மாதத்திற்குள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில், டிம் குக்கின் சொத்து மதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பல கோடிக்கு அதிபதியான, டிம் குக், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் சாதாரண உடையணிந்து அமைதியான முறையில் சான்விட்ச் சாப்பிடுவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பாண்டுக்கான சூப்பர் பவுல் விளையாட்டு போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சீசர்ஸ் சூப்பர்டோமில் நடைபெற்றது. அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்சாஸ் சிட்டி சீஃப் மற்றும் பிலடெல்பியா ஈகிள்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில், கன்சாஸ் சிட்டி சீஃப் அணி 38-35 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள Domilise's Po-Boy and Bar என்ற, போ-பாய் சாண்ட்விச்களுக்கு பெயர் பெற்ற உணவகத்திற்கு சென்றார்.
அப்போது NFL வீரர் ஓடெல் பெக்காம் என்பவருடம், மிகவும் எளிமையான முறையில் சாதாரணமான உடை அணிந்து ஹோட்டலுக்குள் சென்றார். இதையடுத்து, சக மக்களுடன் அமர்ந்து சாண்ட்விச்களை சாப்பிட்டிக்கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. டிம் குக்கின் எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதாவது, பொது இடத்தில் இருந்தாலும், டிம் குக், தன்னைச் சுற்றியுள்ளவர்களால் அடையாளம் காணப்படாமல் மிகவும் சாதாரணமாய் இருப்பது அவரது எளிமையான குணத்தை காட்டுகிறது. இருப்பினும், அங்கு ரசிகர்களின் கவனம் எல்லாம் பெக்காமின் மீது இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி கவனிக்கப்படாமல் போனது குறித்து சில நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், சில பயனர்கள், டிம் குக்கின் பாதுகாப்பு என்ன?. உண்மையான பணம் அங்கீகரிக்கப்படாது, அவருடைய மனநிலையை நான் மதிக்கிறேன், அவர் புகழைத் தேடுவதில்லை, ஒரு மனிதராக இருப்பதுதான் முக்கியம்... புகழ் இல்லாமல் பணக்காரராக இருப்பதே உண்மையான மன அமைதி" என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்


Click it and Unblock the Notifications