ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனை வருவாயை அறிவித்தார். அப்போது இந்தியாவில் 4 புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் 2 அதிகாரப்பூர்வ ஆப்பிள் கடைகள் மட்டுமே உள்ளன. ஒன்று BKC மும்பையிலும், மற்றொன்று DLF சாகேட்டிலும் உள்ளது.
டிம் குக், அனைத்துப் பகுதிகளிலும் ஐபோன் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் தனது அதிகபட்ச வருவாயை எட்டியுள்ளது.

"ஐபோன் அனைத்து பகுதிகளிலும் நல்ல விற்பனை வளர்ச்சியைக் கண்டது. இதனால் செப்டம்பர் காலாண்டின் வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் சேவைகள் பிரிவும் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளிலும், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், யுகே, கொரியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளிலும் செப்டம்பர் காலாண்டின் வருவாய் சாதனைப் படைத்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் இந்தியாவில் நாங்கள் காணும் வளர்ச்சியால்,தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறோம்", என்று குக் கூறியுள்ளார்.
இந்த காலாண்டில், இந்திய சந்தையிலிருந்தும் ஐபேட் வருவாய் அதிகரித்துள்ளது. "ஐபேட் 7 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும். கூடுதலாக, மெக்ஸிகோ, பிரேசில், மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் தெற்காசியா போன்ற பல வளரும் சந்தைகளில் வலுவான செயல்திறனையும் நாங்கள் கண்டோம்" என்று ஆப்பிளின் மூத்த துணைத் தலைவரும் CFO-வுமான லூகா மேஸ்ட்ரி கூறினார்.
இந்தியாவில் அதிகமான கடைகளைத் திறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிடுவது பற்றிய செய்திகள் வெளியாவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் அதிக அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்களைத் திறக்க ஆப்பிள் செயல்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்தியாவில் நான்கு புதிய கடைகள் திறக்கப்படும் என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆப்பிள் ஸ்டோர்கள் எங்கு திறக்கப்பட உள்ளது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
புதிய கடைகள் பெங்களூரு, புனே மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் மும்பையில் உள்ள மற்றொரு கடையுடன் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இங்கு கடைகள் திறக்கப்பட்டால் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இருக்கும். மேலும் அறிக்கைகள் உண்மையாக இருந்தால் பெங்களூரு மற்றும் புனேவில் புதியக் கடைகள் திறக்கப்படும்.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் படி, ஆப்பிள் இப்போது இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பின் அடிப்படையில் 22 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 ஆகியவற்றை வெளியிட்டு, ஆப்பிள் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. உலகளவில், ஆப்பிள் செப்டம்பர் காலாண்டில் $94.9 பில்லியன் வருவாயைப் பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications