ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் இந்த வாரம் மிகவும் முக்கியம் என்றால் மிகையில்லை, மும்பை ஆப்பிள் BKC ஸ்டோர்-ஐ திறந்த கையோடு ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்திய பிரதமரை இன்று சந்திக்க உள்ளார்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக், பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்கு பின் தனது டிவிட்டரில் டிம் குக், சிறப்பான வரவேற்புக்கு மிகவும் நன்றி, இந்தியாவின் எதிர்காலத்திற்கு தொழில்நுட்ப ரீதியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவும், வளர்ச்சி பார்வையை பகிர்வோம். கல்வி முதல் டெவலப்பர்கள் வரை, உற்பத்தி முதல் சுற்றுசூழல் வரையில் முதலீட்டுக்கும், வளர்ச்சிக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என டிவிட் செய்தார் டிம் குக்.
இதை தொடர்ந்த டிவீட் செய்திருந்த பிரதமர் மோடி, டிம் குக் உங்களை சந்திப்பதில் முழு மகிழ்ச்சி, இதோடு இந்தியாவில் தொழில்நுட்பத்தால் இயங்கும் மாற்றங்களை முன்னிலைப்படுத்தும் பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் பல வருடங்களாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது, தனத தயாரிப்புகளை விற்பனை செய்வதை தாண்டி டெக் சேவைகளுக்காக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் உடன் கூட்டணி முறையில் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா - சீனா வர்த்தக போர் பிரச்சனைக்கு பின்பு ஆப்பிள் தனது கூட்டணி சப்ளையர்கள் உடன் இணைந்து இந்தியாவில் பெரும் உற்பத்தி தளத்தை அமைத்து ஐபோன் முதல் ஐபாட் வரையில் தயாரித்து வருகிறது.

இதன் நீட்சி தான் தற்போது இந்தியாவில் நேரடி ரீடைல் விற்பனை கடைகளை திறப்பது, இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ ரீடைல் ஸ்டோர்-ஐ நேற்று மும்பையில் திறந்த டிம் குக் நாளை டெல்லி-யிலும் அதிகாரப்பூர்வ ஸ்டோர்-ஐ திறக்கப்பட உள்ளது.
இதற்கு மத்தியில் இன்று டிம் குக் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிம் கும் இந்திய பயணத்தில் மோடி மற்றும் ஐடி துறை அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆப்பிள் சிஇஓ டிம் குக், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பு மிகவும் முக்கியமானது இந்தியாவில் தனது மொத்த வேல்யூ செயின்-ஐ கொண்டு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி இந்தியாவுக்கு வந்தது மூலம் உற்பத்தி துறை மேம்படுவது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, உற்பத்தி துறையில் புதிய தொழில்நுட்பம் என பல முக்கியமான விஷயங்கள் உள்ளது. இதை தாண்டி தற்போது ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிம் குக், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில் இந்தியாவில் ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பதில் இருக்கும் பிரச்சனைகள் மாநில வாரியாக ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநில அளவில் பல பிரச்சனைகளை ஆப்பிள் எதிர்கொண்டு வருகிறது இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே டிம் குக் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் ஆப்பிள் தனது உற்பத்தியை தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த உற்பத்தியில் இந்தியாவில் இருந்து மட்டுமே 25 சதவீதம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கையோடு மூத்த அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications