உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பிராடெக் லான்ச்-ம் டெக் உலகைப் புரட்டிப்போடும் வகையில் அமைந்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முதல் மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ததில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஐபேட் ஃப்ரோ அறிமுகம் வகையில் இந்த தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த போது ஆப்பிள் அறிமுகம் செய்த பிராடெக்ட்களுக்கும், கடந்த 13-14 வருடங்களாக டிம் குக் அறிமுகம் செய்யும் பிராடெக்ட்களுக்குமான இம்பேக்ட் சந்தையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஐபோனில் வியப்பு அளிக்கும் வகையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்பது ஆப்பிள் ரசிகர்களின் முக்கிய குறையாகவே உள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற டிம் குக் கிட்டதட்ட 13-14 வருடங்களாக இப்பதவியில் உள்ளார். இவரது தலைமையில் நிறுவனத்தைப் பல லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்துள்ளார்.
தற்போது, டிம் குக் அமெரிக்க கார்ப்பரேட் விதிகளின் படி ஓய்வு பெறும் வயதை நெருங்கி வருவதால், அவரைத் தொடர்ந்து யார் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வருவார் என்ற யூகங்கள் பரவலாக எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் நடந்த ஆப்பிள் நிகழ்வில் இது ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பாகவே இருந்தது.
இதுகுறித்து Bloomberg நிறுவனத்தின் மார்க் குர்மன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் டேவிட் குராவுடன் இணைந்து, டிம் குக்கிற்கு பதிலாக ஒருவரை நியமிப்பதில் உள்ள சவால்கள், இப்பதவிக்குச் சாத்தியமான நபர்கள், புதிய சிஇஓ உலகின் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றை ஆப்பிள்-ஐ எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து விவாதித்தனர்.
டேவிட் குரா பேசுகையில் இது ஒரு சுவாரசியமான விஷயம். நிச்சயமாகவே, இந்த நிகழ்வில் (ஆப்பிள் ஈவென்ட்) கலந்து கொண்டவர்கள் யார் அடுத்த தலைமை, யார் பொறுப்பில் இருப்பார்கள் என்பதை கணிக்க துவங்கியிருப்பார்கள்.
மார்க் குர்மன் பதில் அளிக்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிம் குக் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக (2011 முதல்) ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் ஜொப்ஸின் துணை நிர்வாகியாக இருந்தார் என கூறினார்.
இதை தொடர்ந்து டேவிட் குரா பேசுகையில், ஆப்பிள் நிறுவனத்தில் அடுத்து சிஇஓ பதவி யாருக்கு என்பது மறைமுகமான விஷயமாகவே உள்ளது. டிம் குக் உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேறத் திட்டமிடவில்லை என்றாலும், அவர் எப்போது பதவி விலகுவார், யார் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார், அந்த நபர் ஆப்பிளின் முக்கிய நிர்வாக குழுவில் இருப்பாரா அல்லது புதிதாக வெளியில் இருந்து ஒருவரை அழைத்து வரப்படுவாரா என்பது பற்றிய யூகங்கள் அதிகரித்து வருகிறது.
டிம் குக்கின் ஆப்பிள் நிறுவனத்தின் பதவிக்காலம் முடியக் காலம் நெருங்கி வருகிறது. அடுத்த வருடம் அவருக்கு 65 வயது ஆகிறது. டிம் குக் S&P 500 நிறுவனங்களில் உள்ள பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகளை விட வயதானவர் ஆவார்.
டிம் குக் ஆப்பிளில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், ஆப்பிள் நிறுவனம் ஒரு சிக்கலான நிலையில் உள்ளது. ஏனென்றால், அடுத்த தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் நிர்வாகக் குழுவில் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் அல்லது டிம் குக் ஓய்வு பெறும் நேரத்தில் அவர்கள் அறுபதுகளின் பிற்பகுதியில் இருப்பார்கள்.
இதனால் நிறுவனத்திற்கு மிகக் குறைவான ஆப்ஷன்களே உள்ளது, நிர்வாக குழுவில் இருக்கும் 60 வயதான ஒருவரை சிஇஓ-வாக நியமித்தால் அடுத்த சில வருடத்தில் புதிய சிஇஓ மாற்றப்பட வேண்டும். இதனால் ஆப்பிள் நிறுவனத்தால் நீண்ட கால திட்டத்தை தீட்ட முடியாது.
இதை கணக்கிட்டு தான் வாரன் பஃபெட் ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்பனை செய்தாரா என்ற கேள்வி எழுகிறது. இதேபோல் சமீபத்தில் டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார், இதுவும் புதிய கேள்விகளை எழுப்புகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications