Apple: புதிய சிஇஓ.. புது டார்கெட்.. இந்தியா தான் இனி எல்லாமே..!

உலகின் முன்னணி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக இருக்கும் ஆப்பிளின் சிஇஓ ஆக கடந்த 15 ஆண்டுகள் பணியாற்றிய டிம் குக் இன்றுடன் தனது பதவிக்காலம் முடிகிறது. செப்டம்பர் 1 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்கிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு 2011 டிம் குக் சிஇஓ பதவிக்கு வந்த நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அதிகாரத்தில் பெரிய அளவிலான ஆதிக்கம் கொண்டு இருந்தார்.

Apple: புதிய சிஇஓ.. புது டார்கெட்.. இந்தியா தான் இனி எல்லாமே..!

ஜான் டெர்னஸ் 25 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாலும் டிம் குக்-கிற்கு இணையான ஆதிக்கம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது, ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை தக்க வைப்பதற்காக டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக தொடர்ந்து பணியாற்ற உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் உருவாகவிவ்லை.

இதேவேளையில் இத்தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக Apple நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் தனது உலகளாவிய iPhone உற்பத்தியில் 30-35% வரை இந்தியாவுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக (MeitY) அதிகாரி தெரிவித்துள்ளது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Also Read

ஆப்பிள் தனது பெரும் பகுதி உற்பத்தி மற்றும் அசம்பிளியை இந்தியாவுக்கு மாற்றினாலும் 200க்கும் அதிகமாக சப்ளையர் நிறுவனங்கள் இன்னும் சீனாவில் தான் இருக்கிறது. இதனால் பெரும் பகுதி உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து தான் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையை மாற்றினால் தான் இந்தியா முழுமையாக சீனாவின் உதவி இல்லாமல் ஐபோன்களை இந்தியாவில் உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் ஐபோன்கள் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், விஸ்திரான், பெக்டரான் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

தற்போது உலகளாவிய iPhone உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமார் 25% ஆக உள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 30-35% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கு ஜான் டெர்னஸ் தலைமையிலான நிர்வாகம் கட்டாயம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

இந்தியாவில் ஆப்பிள் மொத்த உற்பத்தி மதிப்பு 2026ஆம் நிதியாண்டில் சுமார் 25 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2031ஆம் ஆண்டில் இது 40-45 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஏற்றார் போல் மத்திய அரசு தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் துறைக்கான PLI திட்ட தொகையை அதிகரித்து வருகிறது. இதேபோல் ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு வழக்கப்பட்ட வரி விலக்கு காலமும் மார்ச் 31, 2041 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+