ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் இருந்து வேலை பார்ப்பது சற்று சிக்கலான விஷயம்தான். அங்குள்ள வேலை நமக்கு பிடிக்க வேண்டும், நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிற நபர்கள் உங்களுடன் நட்புடன் பழக வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் நல்லதாக அமைந்தால் மட்டுமே, ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியும். அதையும் மீறி சிலர் பல வருடங்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய கதைகளும் உண்டு. அதற்கு சான்றாய் கிறிஸ் எஸ்பினோசா என்ற நபர் ஆப்பிள் நிறுவனத்தில் 14 வயதிலிருந்து பணியாற்றி நீண்ட காலமாக நிறுவனத்தில் வேலை பார்த்த சாதனையை படைத்துள்ளார்.
கிறிஸ் எஸ்பினோசா என்ற நபர் 1977-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்து கொண்டிருந்த 14 வயது மாணவர். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய மிக நீண்டகால பணியாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

1976-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முட்டாள்கள் தினத்தன்று ஆப்பிள் நிறுவனம் ஒரு குடோனில் நிறுவப்பட்டபோது எஸ்பினோசா ஆப்பிள் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்காக சேர்ந்துள்ளார். 1977-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரின் கூட்டணிக்கு பின்பு முழுநேர ஊழியரானார் கிறிஸ் எஸ்பினோசா. கிறிஸ்துமஸ் சமயத்தில் Apple II BASIC செயல்பாட்டைச் சோதிப்பதுதான் எஸ்பினோசாவின் வேலையாகும்.
1985-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறி, கல்வி நிறுவனமான NeXT-ஐ தொடங்கியபோது, ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த பணியாளராக எஸ்பினோசா இருந்தார். 1997-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் NeXT-ஐ வாங்கிய பிறகு, ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு திரும்பிய பின்னரும் கூட அவர் அந்த பதவியையே வகித்தார்.
எஸ்பினோசா 1978-இல் ஒரு நேர்காணலில் 3 முக்கிய வார்த்தைகளைக் கூறினார். அவை "பச்சாதாபம் - உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கவனம் செலுத்துங்கள் - வேலையை சிறப்பாகச் செய்யுங்கள். கணக்கிடுங்கள் - நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் மதிப்பீடு செய்யுங்கள் என்று கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த கிறிஸ் எஸ்பினோசாவின் கதை, ஒரு நிறுவனத்தின் நீண்ட பயணத்தில் ஒரு தனிநபரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு சான்று. எதிர்காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றை ஆராயும் ஆர்வலர்களுக்கு எஸ்பினோசாவின் அனுபவங்கள் நிச்சயம் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications