சென்னை: அமெரிக்காவின் முன்னணி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்து வருகிறது. சீனாவில் பரந்து விரிந்து இருக்கும் தனது தற்போதைய சப்ளை செயினை மொத்தமாக வெளியேற்றும் முக்கியமான பணியில் இருக்கும் ஆப்பிள்-க்கு தாய்லாந்து, வியட்நாம் போன்றவை பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் இந்தியாவும், தமிழ்நாடும் கைகொடுத்துள்ளது.
கடந்த 5 வருடமாக ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர் நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரித்து வரும் வேளையில், தற்போது தமிழ்நாடு, பெங்களூர், ஆந்திரா, தெலுங்கானா என பல இடத்தில் புதிய தொழிற்சாலைகளை அமைத்தும், விரிவாக்க பணிகளையும் செய்து வருகிறது.

இதன் மூலம் 2025 ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியாவில் ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர்கள் இணைந்து சுமார் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில், ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர்கள் 2025 ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 70% பெண்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுவதால், இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்கீடு அதிகரிக்க ஆப்பிள் & கோ முக்கிய காரணமாக இருக்கப்போகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தித் துறையில் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு நேரடி வேலைக்கு மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டு முடிவில் ஆப்பிள் & கோ 5-6 லட்சம் வேலைகளை உருவாக்கலாம் என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தற்போது ஃபாக்ஸ்கான், டாடா, பெகாட்ரான், ஃபாக்ஸ்லின்க், சால்ப்காம் மற்றும் மதர்சன் உள்ளிட்ட ஐபோன் அசம்பிளி மற்றும் சப்ளையர்கள், 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் 1.65 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்து, மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 6 லட்சமாக உயர்த்தும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
தற்போது, ஒவ்வொரு 7 ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் அடுத்த 3-4 ஆண்டுகளில் தனது அனைத்து ஐபோன்களில் 25% இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள வேளையில் தற்போது 14% ஆக உள்ளது.
சமீபத்தில், பாக்ஸ்கன் தனது சென்னை ஆலையில் iPhone 16 Pro மற்றும் Pro Max மாடல்களை தயாரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் வேளையில் இதை லான்ச் செய்யப்பட்ட உடன் இதன் அசம்பிளி பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ஆப்பிள் இந்தியாவில் கேமரா மாடியூல்களை தயாரிக்க முருகப்பா குழு மற்றும் டாடா குழுமத்தின் டைட்டன் ஆகியவற்றுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஐபோன்கள் தவிர, ஆப்பிள் இந்தியாவில் ஐபேட் மற்றும் ஏர்பாட்-களையும் தயாரிக்க பரிசீலித்து வருகிறது.
மேலும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் இரண்டாவது ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இது நவம்பரில் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 4000 பெண் ஊழியர்களை டாடா குழுமம் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து ஓசூர் மற்றும் கோலார் தொழிற்சாலையில் அமைக்க உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications