இந்தியாவில் சண்டை செய்ய வரும் APPLE.. முன்னணி வங்கிகள் உடன் போட்டி.. ஆப்பிள் பாச்சா பலிக்குமா..?

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் (Apple Inc) சமீபத்தில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்று முதலீட்டாளர்களையும், சக டெக் நிறுவனங்களையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் டிம் குக் தலைமையிலான ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.

ஆப்பிள் தற்போது இந்தியாவை தனது முக்கிய வர்த்தக இலக்காக மாற்றியுள்ள காரணத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் போன், லேப்டாப் என அனைத்து கருவிகளையும் இந்தியாவிலேயே குறைவான விலைக்கு விற்பனை செய்யும் நீண்ட கால திட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் சண்டை செய்ய வரும் APPLE.. முன்னணி வங்கிகள் உடன் போட்டி.. ஆப்பிள் பாச்சா பலிக்குமா..?

இந்தியாவில் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அளவு வெறும் 5 சதவீதம், இதேபோல் முதல் முறையாக ஆப்பிள் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை இதில் அதிகம் என்பதால் ஆப்பிள்-க்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. ஆப்பிள் எகோசிஸ்டம் என்பது ஒரு போதை போன்றது என்பதால் ஒருமுறை ஆப்பிள் பொருட்களை வாங்கியவர்கள் அடுத்தடுத்து ஆப்பிள் பொருட்களை தான் வாங்குவார்கள்.

ஆப்பிள் பொருட்களை பயன்படுத்த துவங்கினால் ஆப்பிள் எகோசிஸ்டம் (Apple Ecosystem) விட்டு Android-க்கு வெளியேறுவது கடினமாக்கும். இந்திய வாடிக்கையாளர்களின் ஆப்பிள் எகோசிஸ்டம் அனுபவத்தை மேம்படுத்தவும், அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் பே சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டு வரும் வேளையில், இதனுடன் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 2019ல் தனது கிரெடிட் கார்டு சேவையை அறிமுகம் செய்தது, வழக்கம் போல் முதன் முதலில் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்த ஆப்பிள் தனது கிரெடிட் கார்ட்-ஐ கோல்டுமேன் சாச்சஸ் உடன் இணைந்து அறிமுகம் செய்தது. Goldman Sachs என்பது அமெரிக்காவில் இருந்து உலகில் பல நாடுகளில் இயங்கி வரும் ஒரு முன்னணி முதலீட்டு வங்கியாகும்.

இதே கூட்டணியில் கிரெடிட் கார்டு உடன் சேமிப்பு கணக்கையும் கொடுத்தது, கிரெடிட் கார்டுக்கு 3 சதவீதம் கேஷ் பேக் என்றும், சேமிப்பு கணக்கிற்கு பிற அமெரிக்க வங்கிகளை காட்டிலும் 10 மடங்கு அதிக வட்டி அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டத்துடன் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் ஆப்பிள் தனது கிரெடிட் கார்டு மற்று சேமிப்பு கணக்கு சேவைகளை சில காலாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ஆப்பிள் ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகத்திடம் அழைத்து பேசியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக ஆப்பிள் தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் BNPL அதாவது BUY NOW PAY LATER சேவையும் அளிக்கிறது, இச்சேவைக்கு கோல்டுமேன் சாச்சஸ் பணத்தை பயன்படுத்தால், தன்னிடம் குவித்து வைத்திருக்கும் பணத்தை செலவு செய்து அதிகப்படியான வருமானத்தை பார்த்து வருகிறது.

இதேபோல் இந்த ஆப்பிள் பே, ஆப்பிள் கிரெடிட் கார்டு, ஆப்பிள் சேமிப்பு கணக்கு, ஆப்பிள் BNPL சேவை ஆகியவற்றை பயன்படுத்த கட்டாயம் ஐபோன் தேவை, ஐபோன் வாங்கிவிட்டால் அடுத்தது ஐவாட்ச், மேக் லேப்டாப் என அனைத்தையும் வாங்க ஆப்பிள் தூண்டும்.

ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை சிறப்பாக இருக்கும் காரணத்தால் ஆப்பிள் எகோசிஸ்டத்தில் இருந்து Android-க்கு செல்லுவதை தடுக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் நிதி சேவைகள் பெரிய அளவில் மக்கள் பயன்படுத்தும் காரணத்தால் அடுத்தடுத்து நிதிசேவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.

ஆனால் இது இந்திய வங்கிகள் உடன் போட்டிப்போடுமா என்றால் பெரிய சந்தேகம் தான், ஆனால் ஆப்பிள் பொருட்களின் விற்பனைக்கு கடன் கொடுக்கும் வர்த்தகத்தை இந்திய வங்கிகளிடம் இருந்து பறிக்கப்படும். இது இந்திய வங்கிகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இக்கூடுதல் சேவை மூலம் மேம்பட்ட அனுபவத்தை பெறுவார்கள்.

இதேபோல் இந்தியாவில் சேமிப்பு கணக்கிற்கு இந்திய வங்கிகளை காட்டிலும் 10 மடங்கு அதிக வட்டி வருமானத்தை அளிக்க முடியுமான என்றால் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+