இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி அதிகரித்தது, உள்நாட்டில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். இதே மேஜிக்-ஐ லேப்டாப், டேப்லெட் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவிலும் உருவாக்க வேண்டும் என மத்திய அரசு இதன் இறக்குமதிக்கு புதிதாக உரிமம் பெற வேண்டும் என விதிமுறையை கொண்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்த நிலையில் இந்தியாவில் லேப்டாப், டேப்லெட் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதி செய்ய சுமார் 110 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக ஆப்பிள், டெல், ஹெச்பி, சாம்சங், லெனோவா, Acer, Xiaomi, IBM மற்றும் ASUS போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ள.

மத்திய அரசு புதிய 'இறக்குமதி மேலாண்மை அமைப்பின்' ஒரு பகுதியாக 110 நிறுவனங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு இந்த நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை கண்காணிக்க உள்ளது. மேலும் இது புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த மாதம் லேப்டாப், டேப்லெட் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதி செய்ய லைசென்சஸ் பெற வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்த நிலையில், இதை திரும்ப பெறப்பட்டு புதிய அமைப்பாக import management system அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இப்புதிய அமைப்பின் கீழ் மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன 110 நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் முன்பு, எத்தனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது, இதன் மதிப்பு ஆகியவற்றின் விபரங்களை இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இந்த புதிய கட்டமைப்பு நவம்பர் 1 2023 முதல் செப்டம்பர் 2024 வரையில் இயங்கும்.
இதன் மூலம் மத்திய அரச லேப்டாப், டேப்லெட் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதியை தடை செய்யாது, ஆனால் தீவிரமாக கண்காணிக்க உள்ளது. இதேபோல் மத்திய வர்த்ததகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கூறுகையில் இந்தியாவின் SEZ பகுதியில் தயாரிக்கப்படும் கருவிகளை Domestic Tariff Area (DTA) பிரிவில் விற்பனை செய்ய முடியும். இதற்காக தனி அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோல் தனியார் நிறுவனங்கள் அரசு அமைப்புக்களுக்கு தேவையான கருவிகளை இறக்குமதி செய்யும் போது இந்த தளத்தில் பதிவிட தேவையில்லை என்ற விதிமுறை தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஏற்கனவே கூகுள் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவில் லேப்டாப், டப்லெட் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதோடு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் பிரச்சனையும் இல்லை என்பதால் இதன் விலை உயரும் வாய்ப்பு குறைந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகி விற்பனை செய்யப்படும் போது இதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications