இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு பாக்ஸ்கான், சாம்சங் மட்டுமே ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்த நிலையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போருக்கு பின், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை மொத்தமாக வெளியேற்ற முடிவு செய்தது.
இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதற்காக மத்திய அரசு சீனாவில் இருந்து வெளியேறி வரும் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்காக உற்பத்தி இணைப்பு ஊக்கத்திட்டம் (PLI) ஆகஸ்ட் 2021 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் என்னவெல்லாம் நடந்துள்ளது தெரியுமா..?

ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உருவாக்கிய உற்பத்தி கட்டமைப்புகளில் நேரடியாக 1,50,000க்கும் மேற்பட்ட ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக அளவில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் உருவாக்கிய 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை 19-24 வயதுடைய முதல் தலைமுறை வேலை தேடுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நேரடி வேலைவாய்ப்புகளைத் தாண்டி 3 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
PLI திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தரவுகளை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன் படி இந்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுபோக ஆப்பிள் நிறுவனம் நேரடியாக இந்தியாவில் கிட்டத்தட்ட 3,000 பேரை பணியமர்த்தியுள்ளது.
மேலும், iOS app உருவாக்கத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் கடந்த 32 மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் நடந்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. PLI திட்டத்துடன் இணைந்து, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்துள்ளது கடந்த ஆண்டு 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஏற்றுமதி செய்து பிராண்டாக திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களான Foxconn, Wistron மற்றும் Pegatron ஆகியோர் மூலம் ஐபோன்-களை உருவாக்கி வருகிறது. இதில் விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்திய பிரிவு கடந்த ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.
PLI திட்டத்தின் கீழ் சுமார் 77000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியதற்கான சலுகைகளை Foxconn, Wistron மற்றும் Pegatron ஆகியோர் பெற்றுள்ளனர். இதில் பாக்ஸ்கான் 41000 ஊழியர்களுக்கான பங்கீட்டையும், விஸ்திரான் 27,300 ஊழியர்களையும், பெகாட்ரான் 9200 ஊழியர்களுக்கான பங்கீட்டையும் பெற்றுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் Foxconn மற்றும் Pegatron உற்பத்தி தளங்கள் சென்னையில் உள்ளது, விஸ்திரான் பெங்களூர் தொழிற்சாலை கைப்பற்றிய டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் மாபெரும் அசம்பிளி தொழிற்சாலையைக் கொண்டு உள்ளது.
பிப்ரவரி வரையிலான 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் உற்பத்தி செய்துள்ளது, இது சந்தை மதிப்பில் 1.6 லட்சம் கோடி ரூபாயாகும். ஆப்பிள் சப்ளைர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications