உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஆப்பிள் 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாகக் கடந்த 6 மாதத்தில் ஒவ்வொரு மாதமும் பெரும் பிரச்சனைகளை ஆப்பிள் நிறுவனம் சந்தித்து வருகிறது.
ஆனாலும் முன்னணி டெக் நிறுவனங்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயலாற்றியுள்ளது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்..? ஆப்பிள் நிறுவனம் சந்தித்த பிரச்சனைகள் என்ன..?
ஆப்பிள் பங்குகள்
ஆப்பிள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 800 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. ஆப்பிள் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 27.31 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் பங்குகள் 49.71 டாலர் சரிந்து 132.30 டாலராக உள்ளது.
ப்ளூம்பெர்க் ஆய்வு
இந்த நிலையில் ப்ளூம்பெர்க் ஆய்வில் நவம்பர் 31, 2022 முதல் டிசம்பர் 16, 2022 வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் பங்குகள் 24.2 சதவீதம் மட்டுமே சரிந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் 27.2 சதவீதம் சரிந்தும், ஆல்பபெட் 31.6 சதவீதம் சரிந்தும், அமேசான் 47.3 சதவீதம் சரிந்தும், மெட்டா 64.5 சதவீதம் சரிந்தும் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியா மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அதிகப்படியான குழப்பத்தில் இருந்தது.
புதிய ஐபோன், ஐவாட்ச்
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன், ஐவாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களையும், வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்த திட்டமிட்டது.
பொருளாதாரச் சூழ்நிலை
ஆனால் எதிர்பார்க்காத விதமாகச் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஐபோன் டிமாண்ட் குறைந்தது என அறிவித்துப் பல முறை தனது உற்பத்தி மற்றும் டிமாண்ட் அளவை குறைத்தது.
சீனா ஐபோன் தொழிற்சாலை
இதற்கிடையில் தான் சீனாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மத்தியிலான பிரச்சனையில் உற்பத்தி குறைந்து உலகம் முழுவதும் நடக்கும் விடுமுறை விற்பனைக்குப் போதுமான ஐபோன்கள் இல்லாமல் ஆப்பிள் நிர்வாகத் தவிக்கிறது.
இந்தியா
சீனா தொழிற்சாலை பிரச்சனைக்குப் பின்பு ஆப்பிள் தனது பெரும்பாலான உற்பத்தியை இந்தியாவுக்குத் திருப்ப உறுதியான முடிவு செய்து அதற்கான பணிகளில் தற்போது இறங்கியுள்ளது.
ரெசிஷன்
ஆனால் ஆப்பிள் நிர்வாகத்தையும், முதலீட்டாளர்களையும் சோகத்தில் ஆழ்த்துவது போல் 2023 முழுவதும் சர்வதேச அளவில் ரெசிஷன் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள காரணத்தால் ஆப்பிள் பொருட்களின் விற்பனை மந்தமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
மத்திய வங்கிகள்
இந்த மந்த நிலைக்கு முதலும் முக்கியமான காரணம் மத்திய வங்கிகள் தத்தம் நாடுகளின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்து வருவது தான்.
ஆப்பிள் ஆப் ஸ்டோர் பிரச்சனை
இதோடு நிற்காமல் ஆப்பிள் ஆப் ஸ்டோர் நடக்கும் செயல்கள் உலகம் முழுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் இனி ஆப்பிள் கருவிகளில் ஆப் ஸ்டோர் மட்டும் அல்லாமல் பிற தளத்தில் இருந்தும் ios ஆப்-களைப் பதிவிறக்கம் செய்ய உரிமையை 2024 ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையும் இதேபோன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தூண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications