உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தைச் சீனா-வில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றியுள்ள நிலையில் தற்போது புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் ஆப்பிள்-ன் இந்திய கனவில் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.
ஆப்பிள் தனது மொத்த உற்பத்தியில் இந்தியாவில் அதிகமாகவும், இதேவேளையில் வேகமாகவும் அதிகரிக்க முயற்சி செய்து வரும் வேளையில், டாடா குழுமம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் மாபெரும் தொழிற்சாலையில் வெறும் 50 சதவீத உதிரி பாகங்கள் தான் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்படும் ஆப்பிள் கருவிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
மீதமுள்ள 50 சதவீத உதிரிப் பாகங்கள் தரமற்றதாகவும், சரியான வடிவத்தில் இல்லாமலும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள்
இந்தியாவில் குட்டி சீனாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்பிள் பயணித்துக்கொண்டு இருக்கும் வேளையில் முக்கியத் தடை உருவாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து ப்ராடெக்ட்களையும் சீனாவில் பெரிய அளவில் உற்பத்தி செய்து அதிகளவிலான லாபத்தைப் பெற்று வருகிறது.
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்
இந்த நிலையில் தான் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த உற்பத்தியை சீனாவில் இருந்து படிப்படியாக வெளியேற்றி தற்போது இந்தியா மற்றும் பிற தென்னாசிய நாடுகளுக்குக் கொண்டு வருகிறது.
பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான்
ஆப்பிள் ப்ராடெக்ட்களின் தயாரிப்பை ஏற்கனவே ஆப்பிளின் பார்ட்னர்களாகப் பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான் ஆகியவை இந்தியாவில் அசம்பிள் செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் மொத்த உற்பத்தி எகோசிஸ்டம் கொண்ட வர வேண்டும் என்பதற்காக ஆப்பிள் ப்ராடெக்ட்களுக்கான உதிரிப்பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க டாடா குழுமத்துடன் கைகோர்த்தது ஆப்பிள்.
டாடா குழுமம்
ஆப்பிள் உடனான ஒப்பந்தத்திற்காக டாடா குழுமம் தமிழ்நாட்டில் மாபெரும் தொழிற்சாலையை அமைத்து பலவேறு உதிரிப்பாகங்களைத் தயாரித்துப் பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான் ஆகிய அசம்பிள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறது.
டாடா குழும உதிரிப்பாகங்கள்
அப்படி டாடா குழுமம் பாக்ஸ்கான் நிறுவனத்திற்குச் சப்ளை செய்து வரும் உதிரிப்பாகங்களில் வெறும் 50 சதவீத உதிரி பாகங்கள் தான் அசம்பிள் செய்யப்படும் ஆப்பிள் கருவிகளுக்கு ஏற்றதாக உள்ளது.மீதமுள்ள 50 சதவீத உதிரி பாகங்கள் தரமற்றதாகவும் அல்லது சரியான வடிவத்தில் இல்லாமலும் இருப்பதாகப் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
50 சதவீதம் உதிரிபாகங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் தாரக மந்திரமே zero defects தான், தற்போது 50 சதவீதம் உதிரிபாகங்கள் பாதிக்கப்படும் காரணத்தால் இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் திட்டம் பெரிய தடையாக மாறியுள்ளது. இதோடு ஆப்பிள்-க்கு இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ், கட்டணம், இன்பரா எனப் பல பிரச்சனைகள் உள்ளது.
இந்தியாவின் பங்கு
ஆப்பிள் தனது மொத்த உற்பத்தியில் தற்போது இந்தியாவின் பங்கு 5-7 சதவீதமாக மட்டுமே உள்ள நிலையில், இதை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது. இதற்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் உற்பத்தி மிகவும் முக்கியமாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications