உலகிலேயே அதிக மதிப்புடைய டெக் நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு மாற்றியது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தனது வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் வெறும் 3 சதவீத சந்தையை மட்டுமே ஆப்பிள் கொண்டு இருந்தாலும், இந்தியாவில் ஆப்பிள் பிராண்டுக்கான ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இதை பணமாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது நேரடி ரீடைல் விற்பனை கடையை இன்று முதல் முறையாக மும்பையில் திறந்துள்ளது.

இந்த கடைக்குள் முதல் நாளே செல்ல வேண்டும் என்பதற்காக மும்பை-ஐ சுற்றியுள்ள மக்கள் மட்டும் அல்லாமல் குஜராத் போன்று தொலைவில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இந்திய ரீடைல் விற்பனைக் கடை இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தை ஆப்பிள் சிஇஓ நேரில் வந்து திறந்தார்.
ஆப்பிள் மும்பை ஸ்டோர்-க்குள் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பூரவ், மாதவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் முதல் ஆளாக உள்ளே சென்று ஆப்பிள் வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தள்ளனர்.

இதில் ஆப்பிள் ரசிகர் ஒருவர் தான் 1984 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கியிருந்தார். அதை இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கும் நாளில் கொண்டு வந்து ஆப்பிள் குக் டிம் குக்-ஐ ஆச்சரியப்படுத்தினார். டிம் குக் ரியாக்ஷனை பாருங்க, இதில் இருந்த புரிந்துக்கொள்ள முடியும். 1984 ஆம் ஆண்டு முதல் இவர் ஆப்பிள் பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்ட டிம் குக் உடனே போட்டோகிராபர்களை அழைத்து 1984 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர்-ஐ கொண்டு வந்த நபருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். தற்போது இந்த போட்டோ தான் வைரலாகியுள்ளது. ஆப்பிள் தனது பிராண்ட் மதிப்பையும் வாடிக்கையாளர்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications