'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்', என்பார்கள். அதுபோல ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் சிஇஓவுமான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமான பின்னரும் இன்றைக்கும் உலகளவில் அவருடைய ஃபேன்ஸ் மிகுந்த மதிப்பை வைத்திருக்கின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக பல விஷயங்களை மேற்கோள் காட்டலாம். ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான பொருட்களுக்கு அவருடைய ஃபேன்ஸ் மத்தியில் மிகப் பெரிய கிரேஸ் இருக்கிறது. ஏலத்துக்கு வந்தால் போட்டா போட்டி போட்டுக் கொண்டு கணிசமான விலைக்கு வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வரிசையில் கடந்த 1976 ஆம் ஆண்டு ரேடியோ ஷேக் என்ற ரீடெய்லருக்கு கட்டணமாக 4 டாலருக்கு ஒரு செக்கில் கையெழுத்திட்டு தந்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ். அப்போது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.8.96 ஆகும். அதன்படி பார்த்தால் இந்த செக்கின் மதிப்பு ரூ.35.
அந்த செக்கை அவர்கள் பணமாக்காமல் வைத்து விட்டனர். ஆனால் இன்றைக்கு அந்த செக் வரலாற்று பெருமைமிக்க ஓர் ஆவணமாக மாறிவிட்டது.
இந்நிலையில் இந்த செக் அமெரிக்காவில் உள்ள ஆர்ஆர் என்ற ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தது. ஏலத்தில் அந்த செக் 36,850 டாலருக்கு விற்பனையானது. அதன் இந்திய மதிப்பு ரூ.30,00,000க்கும் மேலாகும். தி கார்டியன் இதழில் வெளியான ஒரு செய்தியில் கலிபோர்னியாவில் உள்ள வெல்ஸ் பார்கோ பேங்கின் லாஸ் ஆல்டோஸ் கிளையில் உள்ள ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வங்கிக்கணக்கு செக் ஒன்று இதேபோன்று ஏலத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏலத்துக்கு வந்த இந்த செக்கின் மதிப்பு 9.18 டாலராகும். இதுவும் ஸ்டீவ் ஜாப்ஸால் 1976 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டதாகும். ஏலத்தில் இந்த செக் 55,000 டாலருக்கு விலை போனது.
அதே ஆண்டில் மற்றொரு செக் ஏலத்துக்கு வந்தது. அதன் மதிப்பு 13.86 டாலராகும். எல்மார் எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஜாப்ஸ் அளித்த செக். இது 37,564 டாலருக்கு ஏலம் போனது. தரவேண்டிய காசுக்கு அளித்த செக்குகளுக்கு இந்த மதிப்பு என்றால் மற்றொரு விஷயத்தைக் கேள்விப்பட்டால் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போவீர்கள். இது ஒரு வகையில் தனித்துவம் வாய்ந்ததுதான்.
ஒருமுறை ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்தில் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் டெக் அல்லது டிசைன் இஞ்சினியர் வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்தில் தனது கையெழுத்தை நிரப்பியிருந்தார். இந்த விண்ணப்பத்தை யாரோ அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்து ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளார். அது எவ்வளவு விலைக்கு போனது தெரியுமா! ஜஸ்ட் 1,74,757 டாலர்கள். இது நடந்தது 2018 ஆம் ஆண்டு.
"குண்டு மல்லி அஞ்சு ரூபாய்... உன் கூந்தலில் இருந்து உதிர்ந்ததால் கோடி ரூபாய்..." என்ற பாட்டெல்லாம் இப்படித்தான் தோன்றியிருக்கும் போல.
இப்படியாக, 2021 ஆம் ஆண்டு ஒரு ஆவணம் ஏலத்துக்கு வந்தது. அது ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக நிறைவேறிய ஒப்பந்த ஆவணம். இதில் ஸ்டீவ் ஜாப்ஸ், அவரது கூட்டாளிகள் ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்டு வெய்ன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் ஒரிஜினல் பத்திரம் 15 லட்சத்து 94 ஆயிரத்து 500 டாலர்களுக்கு ஏலம் போனது. கிட்டத்தட்ட 13 கோடியே 55 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய்களாகும். இது விற்பனை பத்திரம் இல்லீங்க. ஒரு வியாபாரத்தைதத் தொடங்குவதற்கான ஒப்பந்தப் பத்திரம். நினைச்சுப் பாத்தாலே உச்சி மண்டை சுறுசுறுன்னு இருக்குமே!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முதல் ஜெனரேஷன் பேக்டு ஐபோன் 54,904 டாலருக்கு ஒரு ஏலத்தில் விற்பனையானது. 2007இல் சந்தையில் அறிமுகமானபோது அந்த போனின் அசல் விலை 599 டாலர்கள் மட்டுமே. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இதை வாங்கி வைத்திருந்து இப்போது ஆர்ஆர் நிறுவனத்தின் மூலம் ஏலம் விட்டு ஜாக்பாட்டை அடித்துள்ளார்.
கவிஞர் வாலி எம்ஜிஆரைப் பற்றி ஒரு திரைப்படப் பாடல் எழுதியிருப்பார். அது, "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...". இது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களுக்கும் பொருந்தமாக இருக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications