பழைய ஐபோன்களின் விலையை.. டப்பு டப்புன்னு உயர்த்திய ஆப்பிள்.. புலம்பும் ஐபோன் வெறியர்கள்!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் புதிதாக அறிமுகம் செய்த ஐபோன் 18 சீரியஸ் மற்றும் ஐபோன் டியோ போன்கள் குறித்து சமுக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் இதேவேளையில் ஐபோன் பிரியர்கள் மத்தியில் பெரும் சோகம் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன் அறிமுகம் செய்யும் போது, பழைய ஐபோன் மாடல்களின் விலை குறையும். இதை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஐபோன்களை வாங்குவார்கள்.

பழைய ஐபோன்களின் விலையை.. டப்பு டப்புன்னு உயர்த்திய ஆப்பிள்.. புலம்பும் ஐபோன் வெறியர்கள்!

ஆனால் இந்த ஆண்டு ஐபோன் 18 சீரியஸ் போன்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பே பல நாடுகளில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் விலை குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில் Chipflation என்ற ஒரு விஷயத்தால் தற்போது பழைய ஐபோன்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஐபோன் 18 அறிமுகத்திற்கு பின்பு இந்தியாவில் ஐபோன் 17 மாடல் போன்களின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்து ஷாக் கொடுத்தது ஆப்பிள். இதன் மூலம் ஐபோன் 17 போனின் அறிமுக விலையான 82900 ரூபாயில் இருந்து தற்போது 17000 ரூபாய் அதிகரித்து 99,900 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் ஐபோன் ஏர் விலை 30000 ரூபாய் அதிகரித்து 1,49,900 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ், டியோ ஆகிய மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது, ஐபோன் 18 மற்றும் புதிய ஐபோன் ஏர் ஆகிய 2 மாடல்கள் 2027 மத்தியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் ஐபோன் வரலாற்றில் ஐபோன் 17 சீரியஸ் மாடல் போன்கள் தான் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது, ஐபோன் 17 சீரியஸ் அறிமுகம் செய்த ஒரு வருடத்தில் சுமார் 170 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈர்த்துள்ளது.

ஐபோன் 17 சீரியஸ் போன்கள் விலை உயர முக்கியமான காரணம், உலகளவில் ஸ்டோரேஜ் மற்றும் மெமரி சிப் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது உடன் இதற்கான தட்டுப்பாடும் அதிகமாக இருந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்ப துறையின் திடீர் வளர்ச்சியால் ஒட்டுமொத்த சிப் தயாரிப்பு துறையும் தற்போது ஏஐ பயன்பாட்டுக்கான சிப், ஜிபியு, DRAM, NAND மெமரி சிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் ஸ்மார்ட்போன் போன்ற இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான சிப்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு போன்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது Chipflation காரணமாக ஆப்பிளும் தன்னுடைய போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஐபோன் 18 அறிமுகத்திற்கு முன்பு கூட பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 17 போன்களின் விலை 2000 ரூபாய் குறைவாக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 18 ப்ரோ மாடல் போன் 1199 டாலருக்கு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில் 1,64,900 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க விலைக்கும், இந்திய விலைக்கும் 50,808 ரூபாய் வித்தியாசம்.

இதேபோல் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் 1,79,900 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. ஐபோன் டியோ 2,99,900 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது.

இதனால் கிட்னியை விற்றால் ஐபோன் வாங்க முடியும் என்ற பழைய ஜோக்கை இனியும் பயன்படுத்த முடியாது. உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் விற்றால் மட்டுமே ஐபோன் டியோ வாங்க முடியும் அளவுக்கு விலை இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+