கூகுள் நிறுவனத்திடம் இருந்து செயற்கை நுண்ணறிவு (AI) துறை வல்லுநர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரில் உள்ள இரகசிய ஆய்வகத்தில் ஆப்பிள் நிறுவனம் அனுப்பி ரகசிய திட்டத்தில் ஈடுபடுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
"விஷன் லேப்" என்று அழைக்கப்படும் இந்த லேப், OpenAI நிறுவனத்தின் பிரபல சாட்பாட் சேவையான ChatGPT போன்ற டெக்ஸ்ட் மற்றும் விஷ்வல் அடிப்படையான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட AI மாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

2018 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் செயற்கை நுண்ணறிவு தலைவர் John Giannandrea-வை தங்கள் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு தலைமை அதிகாரியாக நியமித்த பிறகு, இதுவரை 36 கூகுள் AI நிபுணர்களை ஆப்பிள் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் AI பிரிவு ஊழியர்களான பெங்கியோ மற்றும் ருமிங் பாங் போன்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களையும் சுரிச் ஆய்வகத்தில் ஆப்பிள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியா மற்றும் சியாட்டிலில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக இடம், ஆனால் டிம் குக் ஆப்பிள் தலையெழுத்தை ஏஐ மூலம் மாற்றுவதற்காக புதிய இடத்தை அதாவது சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும், ஆப்பிள் ஏஐ துறையில் நுழைவதற்காக இதற்கு முன்பு ஃபேஸ்ஷிஃப்ட் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் Fashwall (image recognition) போன்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆப்பிள் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது சுவிட்சர்லாந்தில் புதிய ஆய்வகத்தை நிறுவுவதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்த துறையில் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது.
எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உருவாக்குவதே விஷன் லேப்பின் இலக்குகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications