ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் முறையாக ஐபோன் அறிமுகம் செய்த நாளில் இருந்து ஐபோன் புகழ் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் சமீபத்திய வருடங்களில் அதிகப்படியான விமர்சனங்களை ஆப்பிள் மற்றும் ஐபோன் எதிர்கொண்டு வருகிறது.
இந்த தடுமாற்றத்தை சமாளிக்க ஆப்பிள் புதிய சந்தைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை துவங்கி இன்று லாபத்தையும், வர்த்தகத்தையும் அள்ளி வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பணமழையில் கொண்டாடி வருகிறது.

இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகள் நீண்ட காலமாக விற்கப்பட்டு வந்தாலும் கடந்த சில வருடங்களாக தான் நேரடி விற்பனையை துவங்கியது. சமீபத்தில் ஆப்பிள் தனது நேரடி விற்பனை கிளைகளை திறந்து இந்திய மக்களை கூடுதலாக கவர்ந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டின் விற்பனை மற்றும் லாப அளவீட்டை ஆப்பிள் நிறுவனம் மார்தட்டிக் கொண்டு வெளியிட்டு உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் வருவாய் கிட்டத்தட்ட 50000 கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு புதிய மைல்கல்-ஐ அடைந்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டை காட்டிலும் 48 சதவீதம் அதிகரித்து 49,321 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மொத்த லாபம் 76 சதவீதம் அதிகரித்து 2,229 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என RoC அமைப்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கடந்த 5 வருடத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்த பிரம்மாண்ட வளர்ச்சியாக இது உள்ளது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கீடு அதிகரித்துள்ளது.
மேலும் லாபம் 76 சதவீதம் அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பில் உதிரிபாகங்கள் கொள்முதல் செலவுகள் குறைக்கப்பட்டதன் மூலம் வந்தது என சந்தை ஆய்வுகள் கூறப்படும் வேளையில் காரணத்தை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
மேலும் 2023-24 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் தனது ஆன்லைன் மற்றும் புதிய கடைகள் மூலம் ஆப்லைன் வர்த்தகத்தையும் வலிமைப்படுத்தியிருக்கும் காரணத்தால் 60000 கோடி முதல் 75000 கோடி ரூபாய் வரையிலான வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஐபோன் 15 அறிமுகம் அதற்கு கைகொடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதோடு இந்தியாவில் ஐபோன் தயாரிப்பும், ஏற்றுமதியும் அடுத்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஐபோன் மற்றும் பிற ஆப்பிள் கருவிகளுக்கான உதிரிபாகங்களும் இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளதால் வரும் ஆண்டுகளில் இதன் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications