இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆப்பிள் இறக்குமதியை குறைக்க முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஒரு கிலோ ஆப்பிள்-ன் இறக்குமதி விலை 50 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு திங்கள்கிழமை தடை விதித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகள் பலன் அடைவது மட்டும் அல்லாமல் அவர்களின் வருமானம் மேம்படுவதோடு, அவர்களின் உற்பத்தியும் வீணாகாது.

மத்திய அரசு தரப்பில் வெளியான தகவல் படி சிஐஎஃப் அதாவது இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்-ன் செலவு, காப்பீடு, சரக்கு போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கிய இறக்குமதி விலை கிலோவுக்கு 50 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அதன் இறக்குமதி தடைசெய்யப்பட உள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பூட்டான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்-க்கு இந்த கண்டிஷன், கிலோவுக்கு 50 ரூபாய் என்ற குறைந்தபட்ச இறக்குமதி விலை நிபந்தனை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 296 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள்-களை இறக்குமதி செய்யப்பட்டது. 2022ல் இது 385.1 மில்லியன் டாலராக இருந்தது.

அமெரிக்கா, ஈரான், பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், பெல்ஜியம், சிலி, இத்தாலி, துருக்கி, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் போலந்து ஆகியவை இந்தியாவிற்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் அடங்கும்.


Click it and Unblock the Notifications