ஆப்பிள் கார்.. கனவு திட்டத்தை நினைவாக்க எல்ஜி, மேக்னா உடன் புதிய கூட்டணி..!

உலகளவில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் கார்களின் தயாரிப்பை நிறுத்திவிட்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறக்கியுள்ளது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே ஐபோன், ஐமேக் போன்ற மிகவும் பிரபலமான கணினிகளைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தானியங்கி எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் இத்திட்டத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தாமல் அப்படியே வைத்திருந்த நிலையில், டெஸ்லாவின் வெற்றி எலக்ட்ரிக் கார் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் உலக நாடுகளை மிரளவைத்துள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மீண்டும் தனது கனவுத் திட்டத்தைக் கையில் எடுத்தது.

 ஆப்பிள் கார் கனவு திட்டம்

ஆப்பிள் கார் கனவு திட்டம்

ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை வடிவமைத்து கூட்டணி நிறுவனங்கள் மூலம் கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதேமுறையில் ஆப்பிள் கார்களையும் தயாரிக்க ஆப்பிள் முடிவு செய்து எல்ஜி மற்றும் மேக்னா ஆகிய இரு நிறுவனங்களுடன் அடுத்த சில வாரத்திற்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாகக் கொரியா டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 புதிய கூட்டணி பேச்சுவார்த்தை

புதிய கூட்டணி பேச்சுவார்த்தை

தற்போது நடந்துள்ள பேச்சுவார்த்தையின் படி ஆப்பிள் பிராண்டில் வெளியாக உள்ள தானியங்கி காருக்கான பவர்டிரைன்-ஐ எல்ஜி நிறுவனம் தயாரித்து அளிக்கும், அதைக் கனடா நாட்டின் மேக்னா அடிப்படையாக வைத்துக் கார்களை முழுமையாகத் தயாரிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஆப்பிள் பிராண்ட் கார்களை எல்ஜி மற்றும் மேக்னா தயாரிக்கிறது.

 எல்ஜி மற்றும் மேக்னா சூப்பர்

எல்ஜி மற்றும் மேக்னா சூப்பர்

எல்ஜி நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி மற்றும் பவர்டிரைன் தயாரிப்பில் அதிகளவிலான திறனும் அனுபவமும் உள்ளது. இதேபோல் கனடா நாட்டின் மேக்னா நிறுவனத்திற்குப் பல பொருட்களைத் தயாரித்த அனுபவம் அதிகமாக உள்ளது.

 ஹூண்டாய் மோட்டார்ஸ் உடன் பேச்சுவார்த்தை

ஹூண்டாய் மோட்டார்ஸ் உடன் பேச்சுவார்த்தை

இதேபோல் ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தனது மாபெரும் தானியங்கி கார்கள் தயாரிப்பு குறித்து உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் ஹூண்டாய் மோட்டார்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

 ஹூண்டாய் - கியா நிறுவனம்

ஹூண்டாய் - கியா நிறுவனம்

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனமும் ஈடுபட உள்ளதாகக் கூறப்பட்டது. இதேபோல் அமெரிக்காவில் இதற்காகத் தனித் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி

ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி

ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காகப் பாக்ஸ்கான் உடன் கூட்டணி வைத்துள்ளது போல் தானியங்கி கார் தயாரிப்புக்காக ஹூண்டாய் உடன் கூட்டணி வைக்க ஆப்பிள் பேச்சுவார்த்தையைத் துவங்கியது.

 தோல்வி அடைந்த பேச்சுவார்த்தை

தோல்வி அடைந்த பேச்சுவார்த்தை

ஆனால் வெறும் ஒரு மாத இடைவேளையில், ஹூண்டாய் நிறுவனம் ஒரு ஒப்பந்த தயாரிப்பாளராக இருக்க விருப்பமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக ஹூண்டாய் அறிவித்தது.

 உறுதியான திட்டம்

உறுதியான திட்டம்

ஆப்பிள் கார் திட்டம் குறித்துப் பல முறை செய்தி வெளியாகி தோல்வி அடைந்தது. ஆனால் எல்ஜி மற்றும் மேக்னா உடனான கூட்டணி உறுதியானதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள் கார் திட்டத்தை டைட்டன் என ரகசிய பெயர் கொண்டு அழைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முடங்கியிருந்தது.

 டெஸ்லா வெற்றி

டெஸ்லா வெற்றி

சில வருடங்களுக்கு முன்பு கார்களுக்கான மென்பொருளான கார்ப்ளே அறிமுகம் செய்த பின்பு மீண்டும் டைட்டன் திட்டத்தைக் கையில் எடுத்தது ஆப்பிள், தற்போது டெஸ்லா நிறுவனத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆப்பிள் தனது கார் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+