கோவையில் கால்பதிக்கும் APPLE!. விப்ரோ எண்டர்பிரைசஸ், லட்சுமி மெஷின் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் சப்ளையர் நெட்வொர்க்கை விரிவுபடுத்த விரும்புகிறது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிப்பதில் சீனாவுக்கு நிகராக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. முதலில் சென்னையில் வெறும் ஐபோன் அசம்பிளி தளம் மட்டுமே அமைக்கப்பட்ட ஆப்பிள் சப்ளையர்கள் தற்போது முழு ஐபோன்களையும் தயாரிப்பதைத் தாண்டி, ஆப்பிள் தனது பலதரப்பட்ட சப்ளைர்களை தமிழ்நாட்டு கொண்டு வருவதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது, விப்ரோ என்டர்பிரைசஸ் மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (LMC) ஆகியவற்றுடன் தங்கள் சப்ளையர்களாக இணைய ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவையில் கால்பதிக்கும் APPLE!. விப்ரோ எண்டர்பிரைசஸ், லட்சுமி மெஷின் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

ஆப்பிள், இந்தியாவில் ஏற்கனவே டாடா குழுமம், மதர்சன் குழுமம், அக்யூஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தி அதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடும், தற்போது ஆப்பிளின் மிகப்பெரிய சப்ளையர் தளமாக திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், விப்ரோ என்டர்பிரைசஸ் மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (LMC) ஆகியவற்றுடன் தங்கள் சப்ளையர்களாக இணைய ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் விப்ரோ எண்டர்பிரைசஸுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் தயாரிப்புகளின் supply chain-யை ஆபத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனம் லட்சுமி மெஷின் ஒர்க்ஸுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது," என்று The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் தொடர்பான தொடரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிறுவனத்தின் உறுதிப்பாட்டை, இந்திய உற்பத்தியாளர்களுடனான ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஈடுபாடு நிரூபிக்கிறது என்று தொழில்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், விப்ரோ என்டர்பிரைசஸ் குழுமம், விப்ரோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினீயரிங்( Wipro Infrastructure Engineering), விப்ரோ கன்சூமர் கேர் மற்றும் லைட்டிங் (Wipro Consumer Care and Lighting)ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளை கொண்டுள்ளது. அதில், இன்ஜினீயரிங் பிரிவு ஹைட்ராலிக்ஸ், நீர் சுத்திகரிப்பு, சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing), விண்வெளி மற்றும் தானியங்கி(ஆட்டோமேஷன்) தீர்வுகள் ஆகியவற்றில் சிறப்பு பெற்றுள்ளது. இதேபோல், விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவு (Consumer Division), தனிப்பட்ட பராமரிப்பு (Personal Care), வீட்டு பராமரிப்பு (Home Care), விளக்குகள் (Lighting) மற்றும் மின்சார ஸ்விட்சுகள் (Switches) உள்ளிட்ட FMCG (Fast-Moving Consumer Goods) வேகமாக இயக்கப்படும் பொருட்களில் கவனம் செலுத்துகிறது.

இதேபோல், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (LMW) பல்வேறு துறைகளில் செயல்படுகிறது, அதில், நூல் இயந்திரங்கள் (Textile Machinery),CNC இயந்திரங்கள், Foundry and Castings), விண்வெளி கூறுகள் மற்றும் கலவைப் பொருட்கள் (Aerospace Components and Composites) ஆகிய துறையில் சிறந்து விளங்குகிறது.

இதுகுறித்து Koan Advisory குழுமத்தின் மூத்த இணை அதிகாரியான த்ருவ் சேகர் கூறுகையில், விப்ரோ எண்டர்பிரைஸ் மற்றும் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் போன்ற உள்ளூர் சப்ளையர்களுடன் உறவுகளை வலுப்படுத்தும் ஆப்பிளின் உத்தி, supply chain அபாயங்களைக் குறைத்தல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார். மேலும், பெரும் அளவிலான மின்னணு உற்பத்தி Large-Scale Electronics Manufacturing (LSEM) தொடர்பான உற்பத்தியை ஊக்குவிப்பதில்( PLI), ஆப்பிள் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கணிசமான ஏற்றுமதி மற்றும் உற்பத்தி அளவுகளை உயர்த்துவதன் மூலம், இதன் வெற்றிக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது," என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் மேலும் கூறுகையில், மின்னணு கூறுகளுக்கான ஊக்குவிப்பு திட்டத்தை அரசு பரிசீலனை செய்யும் நிலையில், ஆப்பிள் தனது உள்நாட்டு தொடர்புகளை மேலும் விரிவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த அணுகுமுறை, இந்தியாவில் வணிக செலவுகளை குறைக்கும், அதே நேரத்தில் உள்நாட்டு பொருளாதார பங்கேற்பாளர்களின் வளர்ச்சியை தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியாக ஆதரிக்கவும் உதவும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்குமுறை மற்றும் நிதியியல் பலன்களைத் தாண்டி, ஆப்பிளின் உள்ளூர்மயமாக்கல் உத்தி இந்தியாவிற்கான நீண்டகால உறுதிப்பாட்டைக் குறிக்கிறது," என்று அவர் கூறினார். இதுமட்டுமல்லாமல், "அதன் உற்பத்தித் தளத்தை அதிகரிப்பதன் மூலம், ஆப்பிள் சீனாவைச் சார்ந்துள்ள அபாயங்களை மட்டுமல்லாமல், இந்தியாவை தனது உலகளாவிய supply chain-யில் ஒரு முக்கிய மையமாகவும் நிலைநிறுத்தும் என்றும் அவர் கூறியதாக The Economic Times குறிப்பிட்டுள்ளது.

Take a Poll

முன்னதாக ஜனவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் புனேவை தளமாகக் கொண்ட கல்யாணி குழும நிறுவனமான பாரத் ஃபோர்ஜுடன் அதன் சப்ளையராக சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், பாரத் ஃபோர்ஜ் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இயந்திர பாகங்கள் உட்பட பல்வேறு கூறுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

FAQs
இந்தியாவில் ஆப்பிளின் சப்ளையர்கள் யார்?


ஆப்பிள், இந்தியாவில் ஏற்கனவே டாடா குழுமம், மதர்சன் குழுமம், அக்யூஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தி அதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் ஆப்பிளின் உத்தி என்ன?

ஆப்பிள் இந்தியாவில் iPhone உற்பத்தியை அதிகரிக்க Foxconn, Pegatron, Wistron (தற்போது Tata Group உடைய ownership-ல் உள்ளது) போன்ற உற்பத்தியாளர்களுடன் கூட்டாண்மை செய்து வருகிறது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்ட ஒரு பெரிய உலகளாவிய அமைப்பாகும். இது கூறுகளின் தயாரிப்பு, பொருட்களின் அசம்பள், விநியோகம், மற்றும் விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கியது.

தமிழ்நாட்டில் ஆப்பிளின் சப்ளையர்கள் யார்?

விப்ரோ என்டர்பிரைசஸ் மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் (LMC) ஆகியவற்றுடன் தங்கள் சப்ளையர்களாக இணைய ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+