ஆப்பிள் ஐபோன்களில் புதிய அப்டேட்களில் பெரிய வித்தியாசம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இதை வாங்குபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில் ஐபோன் 15 இந்தியாவில் தயாரிக்க துவங்கப்பட்டு உள்ளதால் இதன் விலை பெரிய அளவில் குறையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐபோன்களின் அசம்பிள் மட்டும் தான் இந்தியாவில், அதன் உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கு அதிகப்படியான வரி செலுத்தும் காரணத்தால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் விலையில் இந்தியாவில் விற்க முடியாது என பலரும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆப்பிள் ஐபோன்களின் ப்ரோ மாடல்கள் மட்டும் விலை உயர்வுடனும், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் போன்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐபோன் 15 ப்ரோ மாடல் 999 டாலருக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டாலும், அங்கு பல மாநிலங்களில் வரி உள்ளது, இந்த வரி ஒவ்வொரு இடத்திற்கும் மாறுப்படும்.
இதேபோல் இந்தியாவில் மாநில வாரியாக வித்தியாசம் இல்லாமல் ஓரே வரியாக 18 சதவீதம் நடைமுறையில் உள்ளது, இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடல் போன் 1,34,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதில் 18 சதவீத ஜிஎஸ்டி வரி மூலம் 20,577.97 ரூபாயாக உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 22 சதவீத சுங்க வரியும் உள்ளது, இது 20,615.45 ரூபாயாக உள்ளது.
அப்படி பார்க்கும் போது ஐபோன் 15 ப்ரோ 128 ஜிபி போனை ஒருவர் வாங்கினால் அதற்கு அரசுக்கு வரியாக 41,193.42 ரூபாய் செல்கிறது. இதுவே ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்றால் 48,827.48 ரூபாயை வரியாக செல்கிறது. இதை தாண்டி அன்னிய செலாவணி மதிப்பு, நாணய மாற்ற கமிஷன் என பல விஷயங்கள் இதற்கு பின் உள்ளது.
இதையெல்லாம் கணக்கில் வைத்து தான் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபோனின் இந்திய விலைக்கு மாற்றுகிறது. மேலும் இதை பலரும் கூறுவது போல் அமெரிக்க டாலர் விலையில் அப்படியே கணக்கிட முடியாது.
ஆனால் இந்தியாவிலேயே அனைத்து உதிரிபாகங்களையும் தயாரித்து அசம்பிள் செய்து வெளியாகும் போன்கள் கட்டாயம் சர்வதேச சந்தை விலைக்கு கிட்டதட்ட நெருங்கிய விலையில் விற்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications